செப்டம்பர் 7-ம் தேதி வரை 1.19 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும், இதில் 76.2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
வருமான வரித்துறையின் மின்-தாக்கல் தளம்- சமீபத்திய தகவல்கள்
வருமான வரித்துறையின் மின்-தாக்கல் தளமான www.incometax.gov.in 2021 ஜூன் 7 அன்று தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்தே அதிலுள்ள குறைபாடுகள் மற்றும் சிரமங்கள் குறித்து வரிசெலுத்துவோர் மற்றும் பணியாளர்கள் தகவல் அளித்து வந்தனர்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இத்திட்டத்திற்கான சேவை வழங்குனரான இன்போசிஸ் நிறுவனத்துடன் நிதி அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து கண்காணித்து வருகிறது.
» ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» 5 மாநில தேர்தலுக்கு தயாராகும் பாஜக: மத்திய அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமனம்
பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்ட நிலையில், தளத்தில் செய்யப்பட்டு வரும் தாக்கல்களில் நேர்மறை நிலை ஏற்பட்டுள்ளது. 2021 செப்டம்பர் 7 வரை 8.83 கோடிக்கும் அதிகமான வரிசெலுத்துவோர் தளத்திற்குள் நுழைந்துள்ளனர். 2021 செப்டம்பரில் இதன் தினசரி சராசரி தாக்கல் 15.55 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
2021 செம்டம்பரில் தினமும் 3.2 லட்சம் வருமான வரி விவரங்களின் தாக்கல்கள் நடைபெற்று வரும் நிலையில், 2021-22 மதிப்பீட்டு வருடத்தில் 1.19 கோடி வருமான வரி விவரங்களின் தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 76.2 லட்சத்திற்கும் அதிகமான வரி செலுத்துவோர் ஆன்லைன் முறை மூலம் செய்துள்ளனர்.
மத்திய செயல்பாட்டு மையத்திற்கு தேவையான் 94.88 லட்சத்திற்கும் அதிகமான வருமான வரி விவரங்களின் தாக்கல்கள் மின்னணு முறையில் சரிபார்க்கப்பட்டுள்ளது ஊக்கமளிப்பதாக உள்ளது. இவற்றில் 7.07 லட்சம் வருமான வரி விவரங்களின் தாக்கல்கள் மீதான பணிகள் நிறைவடைந்துள்ளன.
முகமில்லா மதிப்பீடு/ மேல்முறையீடு/அபராத செயல்முறைகளின் கீழ் வருமான வரித்துறையால் வெளியிடப்பட்டுள்ள 8.74 லட்சம் நோட்டீஸ்களை பார்க்க வரி செலுத்துவோரால் முடிகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
4 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago