28 நாட்களுக்குப் பிறகு ரூ.100-க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை; தமிழக அரசு வரி குறைப்பு எதிரொலி

By செய்திப்பிரிவு

கடந்த 28 நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.

இதனைத் தொடர்ந்து சில மாநிலங்களில் பெட்ரோல்- டீசலுக்கான வரி சற்று குறைக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவர்கள் பெட்ரோல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவுக்குக் குறைக்கப்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்’’ என அறிவித்தார்.

பெட்ரோல் வரி குறைப்பு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் தமிழகத்தில் இன்று பெட்ரோல் விலை குறைந்துள்ளது.

கடந்த 28 நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 102.49 ரூபாயாக இருந்தது. அதில் தமிழக அரசுக்கு, மதிப்பு கூட்டு வரியாக, 15 சதவீதம் மற்றும் அதனுடன், 13.02 ரூபாயும் சேர்த்து வருவாய் கிடைக்கிறது.

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி, மூன்று ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டதால் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 3.02 குறைந்து ரூ 99.47 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை சென்னையில் கடந்த 28 நாட்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதே சமயம் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையில் கடந்த 31 நாட்களாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ 94.39 ஆக உள்ளது. மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

55 mins ago

வணிகம்

2 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

மேலும்