சவூதி அரேபியா, ஈராக் நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு

By ராய்ட்டர்ஸ்

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் சவூதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து அதிகமாக கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதிகமான இறக்குமதியால் ஒபெக் (OPEC) கூட்டமைப்பு நாடுகள் அதிக லாபமடைந்துள்ளன.

விலை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மிகக் குறைந்த தொலைவில் இந்தியா இருப்பதாலும் ஒபெக் கூட்டமைப்பு நாடுகளிலிருந்து அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

ஜனவரி மாதம் சவூதி அரேபியா நாட்டிலிருந்துதான் இந்தியா அதிகமாக இறக்குமதி செய்துள்ளது. கடந்த வருடம் இதே மாதத்தில் செய்த இறக்குமதியை விட 29 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் நாள் ஒன்றுக்கு 9,40,000 பேரல் இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தாம்சன் ராய்ட்டர்ஸ் எண்ணெய் ஆய்வு நிறுவனம் நேற்று வெளியிட்டது.

அதே போல் ஈராக்கிடமிருந்து கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு 9,30,000 பேரல் இறக்குமதி செய்யப் பட்டது. இது கடந்த 2015 ஜனவரியுடன் ஒப்பிடும் போது 52 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து இரண்டு நாடுகளில் இருந்தும் நாள் ஒன்றுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்த அளவை விட கடந்த ஜனவரி மாதத்தில்தான் அதிகமாக இருந்துள்ளது என்று தாம்சன் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாறாக, லத்தீன் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு இந்த வருடம் குறைந்துள்ளது.

நாங்கள் லத்தீன் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதை மெதுவாக குறைத்துக்கொண்டே வருகிறோம். மாறாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அளவை அதிகரித்துள்ளோம் என்று மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹெச். குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஈராக்கிலிருந்து நாள் ஒன்றுக்கு 3,00,000 பேரல் இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் பஸ்ரா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக ஈராக்குடன் நீண்ட கால ஒப்பந்தம் செய்துள்ளது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்