24 மணி நேரத்தில் ஒரு லட்சம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு பிராண்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு கிட்டியது இல்லை என்று கூறும் அளவுக்கு ஓலாவுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
முன்னதாக அந்நிறுவனம், ரூ.499 முன்பணம் செலுத்தி ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதன் இணையதளத்தில் அறிவித்தது.
மேலும், அந்த முன்பணம் முழுவதுமாக திருப்பியளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதனாலேயே, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு லட்சத்தை தொட்டுள்ளது.
ஜனவரி முதல் ஜூன் 2021 இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் 30,000 இ ஸ்கூட்டர் விற்பனையானது. சமீப நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறிவருவதால் மக்களுக்கு இ ஸ்கூட்டர் மீதான நாட்டமும் அதிகரித்துள்ளது.
» பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு: சென்னையில் ரூ. ரூ 102.49: மும்பையில் ரூ. 108
» தங்கம் விலை பவுனுக்கு ரூ. 144 குறைவு; இன்றைய நிலவரம் என்ன?
இது குறுத்து ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் கூறுகையில், "எங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்குக் கிடைத்த வரவேற்பு எனக்குப் பெருமகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா முழுவதுமிருந்து வாடிக்கையாளர்கள் பெரும் ஆதரவு கொடுத்துள்ளனர். இது இந்திய மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து தங்களின் கவனத்தை இ ஸ்கூட்டர்கள் பக்கம் திருப்புகின்றனர் என்பதையே காட்டியுள்ளது.
உலகம் முழுவதும் இ ஸ்கூட்டர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில் ஓலா இ ஸ்கூட்டருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது ஓலா ஸ்கூட்டர்களை முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்கூட்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்" என்றார்.
ஓலா ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இந்த இஸ்கூட்டரில், தனியாக பிரித்தெடுக்கக் கூடிய லிதியம் இயான் பேட்டரி, க்ளவுட் இணைப்பு, அலாய் சக்கரம் ஆகியன உள்ளன.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago