இந்தியாவின் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 52.4% வளர்ச்சி அடைந்துள்ளது.
நடப்பாண்டு ஜூன் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 32.50 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 21.91 பில்லியன் அமெரிக்க டாலரை விட 48.34% அதிகம். கடந்த இரண்டு மாதங்களை போலவே ஜூன் மாதத்திலும் இந்திய பொறியியல் ஏற்றுமதி வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்தை விட இந்தியாவின் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி இந்த ஆண்டு 52.4% வளர்ச்சி அடைந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் இதனை ஒப்பிடுகையில், இந்த விகிதம் 41.9 சதவீதம் உயர்வு.
2019-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 6274.9 மில்லியன் அமெரிக்க டாலராகவும், 2020 ஜூன் மாதத்தில் 5841.6 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகவும் இருந்த பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 8903.5 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
» கிருஷ்ணா, மற்றும் கோதாவரி நதிகள் மேலாண்மை வாரியங்களின் அதிகார வரம்பு: அரசிதழில் வெளியீடு
» கரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை: மத்திய அரசு
2021-22 ஏப்ரல்- ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதியின் மதிப்பு மொத்தம் 24722.6 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
வாகனத் துறை, 2019-20 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை விட 1.7% வளர்ச்சியை அடைந்துள்ளது. 2020-21 -ன் முதல் காலாண்டில் இந்தத் துறையின் நடப்பாண்டு ஏற்றுமதி வளர்ச்சி 195% உள்ளது. இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் (279%), மோட்டார் வாகனங்கள்/ கார்கள் (159%) மற்றும் வாகன உதிரி பாகங்களின் (204%) ஏற்றுமதி வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணம்.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago