ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அவசரகால டேட்டா கடன் திட்டத்தை அறிமுகம்செய்துள்ளது.
இதன்படி, அவசர நேரத்துக்கு டேட்டா பேக்கை பணமில்லாமல் கடனாகப் பெற்று பின்னர் செலுத்திக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் உடனுக்குடன் பணம் செலுத்தி டேட்டாவை டாப்அப் செய்யும் சூழலில் இருக்கமாட்டார்கள் என்பதால், இந்த டேட்டா கடன் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ரீசார்ஜ் நவ் அன்ட் பே லேட்டர் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஜியோ நிறுவனம் அதிவேக டேட்டா கடன் திட்டத்தை வழங்கியுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 5 முறை 1 ஜிபி டேட்டாவை கடனாப் பெறலாம். ஒரு ஜிபி டேட்டாவின் விலை ரூ.11 ஆகும். 5 முறை அவசரகாலத்துக்குப் கடனாக டேட்டாவைப் பெற்று பின்னர் ரீசார்ஜ் செய்யும்போது சேர்த்துச் செலுத்த வேண்டும். இந்த எமர்ஜென்சி டேட்டா திட்டம், மைஜியோ செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எமர்ஜென்சி டேட்டாவில் டாப்அப் செய்தாலும் இணையத்தின் வேகம் குறையாது, வழக்கம் போல் இருக்கும், சேவையில் எந்த மாறுபாடும் இருக்காது என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
19 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago