நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020-21ஆம் நிதியாண்டில் மைனஸ் 7.3 சதவீதமாகச் சரிந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அக்டோபர்- டிசம்பர் காலாண்டை விட 4-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் கடைசி காலாண்டில் ஜிடிபி 3 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 1.6% மட்டுமே வளர்ந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு நடவடிக்கையால்தான் பொருளாதார வளர்ச்சி மோசமான சரிவைச் சந்தித்துள்ளது.
2019-20ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் 2020-21ஆம் ஆண்டில் மைனஸ் 7.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் முதல் கட்டக் கணக்கில் 2020-21ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.7 சதவீதம் வீ்ழ்ச்சி அடையும் எனக் கணக்கிட்ட நிலையில் அதைவிட சற்று குறைந்துள்ளது.
சீனா 2021ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் 18.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இந்தியா 1.6 சதவீதம் மட்டுமே பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய அளவிலான ஊரடங்கு நடவடிக்கையால் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூன் மாதத்தில் மைனஸ் 23.9 சதவீதம் பொருளாதாரம் வீழ்ந்தது. 2-வது காலாண்டான ஜூலை- செப்டம்பரில் மைனஸ் 7.5 சதவீதமாகச் சரிந்தது.
3-வது காலாண்டில் பண்டிகை நாட்கள் அதிகமாக வந்ததால் பொருளாதாரம் 0.5 சதவீதம் வளர்ந்திருந்தது. கடைசி காலாண்டில் 1.6 சதவீதம் முன்னேறியது. ஒட்டுமொத்தமாகக் கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago