நேற்றைய வர்த்தகத்தில் 11 வருடங்களுக்கு முன்பிருந்த விலை அளவுக்கு கச்சா எண்ணெய் சரிந்தது. சர்வதேச அளவில் உற்பத்தி அதிகரித்து வருவதன் காரணமாகவும், அடுத்த வருடத்தில் தேவை குறையும் என்ற கணிப்புகள் காரணமாகவும் கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஈரான், லிபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அதிக உற்பத்தி சந்தைக்கு வருகிறது. கடந்த ஏழு வருடங்களில் மாதாந்திர அளவில் கச்சா எண்ணெய் கடும் சரிவை சந்திப்பது இப்போதுதான்.
கச்சா எண்ணெய் விலை சரிவதன் காரணமாக வாடிக்கை யாளர்கள் பயன் அடைந்தாலும், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் செலவுகளை குறைப்பது, ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தவிர எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் வருமானம் குறைவதன் காரணமாக நிதி நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுவருகிறது.
பிரென்ட் பியூச்சர்ஸ் 2 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 36.05 டாலராக வர்த்தகமானது. கடந்த 2004-ம் ஆண்டு ஜூலைக்கு பிறகு குறைந்த விலை இதுவாகும். இந்த மாதத்தில் மட்டும் பிரென்ட் பியூச்சர்ஸ் 18.5 சதவீதம் சரிந்தது. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் லேமென் பிரதர்ஸ் பிரச்சினை போது ஒரே மாதத்தில் கச்சா எண்ணெய் அதிகமாக சரிந்தது. அதன் பிறகு அதிகம் சரிவது இப்போதுதான்.
கச்சா எண்ணெய் விலையில் ஒவ்வொரு டாலர் சரிவும் வருங்கா லத்தில் கடும் நெருக்கடியை உண்டாகும் என சாக்ஸோ வங்கியின் முதன்மை மேலாளர் ஒலே ஹான்சென் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருடத்தில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. இதனால் வெனிசுலா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் கடும் நெருக் கடியில் உள்ளன. 2016-ம் ஆண் டிலும் இந்த நாடுகள் கடும் நெருக்கடியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
பொருளாதாரத்தில் பலமாக இருக்கும் அரபு நாடுகள் கூட இதில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கச்சா எண்ணெய் சரிவில் இருந்து தங்கள் நாணயங்களை பாதுகாக்க அரபு நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கின்றன. சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகள் வட்டியை உயர்த்தி உள்ளன. ஈராக் தன்னுடைய தினார் கரன்ஸியின் மதிப்பை செயற்கையாக குறைத்திருக்கிறது.
தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்திருக் கிறது.
அமெரிக்கா அரசு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கடந்த 40 வருடங்களாக தடுத்து வைத்திருந் தது. இப்போது அந்த தடையை விலக்கி இருப்பதால் கச்சா எண்ணெய் வரத்து அதிகரித் துள்ளது. சந்தையை கைப்பற்ற போட்டி அதிகரித்துள்ளது.
இதற்கிடையே சி.எல்.எஸ்.ஏ நிறுவனத்தின் நிர்வாக இயக் குநர் கிறிஸ்டோபர் வுட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 20 டாலர் வரை சரியும் என கணித்திருக்கிறார். இதே கருத்தை தான் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் கூறி இருக்கிறது. சீனா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் நுகர்வு குறித்த சந்தேகம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளன.பிட்ச் நிறுவனம் 2018-ம் ஆண்டு வரை பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 55 டாலருக்கு மேல் செல்ல வாய்ப்பு இல்லை என்று கணித்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago