வருமான வரி கணக்கு: மறுமதிப்பீடு, நோட்டீஸ், முறையீடு; அவகாசம் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்டவற்றிக்கான கால அவகாசம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2019 - 20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடு, இந்தாண்டு மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல் வருமான வரி துறையின், 'நோட்டீஸ்' பெற்றவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்., 1ம் தேதியுடன் முடிவடைந்தது.

நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றின் அதிகரிப்பால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரி செலுத்துவோர், வரி ஆலோசகர்கள் மற்றும் இதர பங்குதாரர்களின் கோரிக்கையை ஏற்று, நேரடி வரி - விவாதங்களில் இருந்து விடுபட்டு நம்பிக்கையூட்டுதல் சட்டம் 2020 இன் கீழ் பல்வேறு அறிவிக்கைகளின் வாயிலாக முன்னதாக 2021 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் அறிவித்துள்ளது.

வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள்(சில விதிகளில் தளர்வுகள் அளிக்கும்) 2020-இன் ‌கீழ் கீழ்க்காணும் செயல்களுக்கு முன்னதாக 2021 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* வருமான வரி சட்டம் 1961 இன் கீழ் மதிப்பீடு அல்லது மறுமதிப்பீட்டிற்கான உத்தரவையும் நிறைவேற்றுவது.

* சட்டப்பிரிவு 144 சி இன் துணைப் பிரிவு (13) இன் கீழ் பூசல்கள் தீர்வு குழுவின் வழிகாட்டுதலின் படி உத்தரவை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம்

* வருமான மதிப்பீட்டில் இடம்பெறாத மதிப்பீட்டை மீண்டும் மதிப்பீடு செய்வதற்கு சட்டப் பிரிவின் கீழ் அறிவிக்கை வெளியிடுதல்

* நிதிச் சட்டம் 2016-இன் பிரிவு 168-இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் சமப்படுத்தல் வரி செயலாக்கத்தை அறிவித்தல் போன்ற வருமான வரிததுறை சார்ந்த பணிகளுக்கான அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

20 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்