தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை இந்தியாவில் மேம்பட்டு வருவதாக சமீபத்தில் உலக வங்கி குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் இங்கு தொழில் தொடங்கும் சூழ்நிலை எப்படி இருக்கிறது, தொழில் முனைவோர் என்ன செய்ய வேண்டும், நிறுவனத்தை எப்படி தொடங்க வேண்டும் என்ற பல்வேறு கேள்விகளுடன் இந்தியாபைலிங்ஸ் டாட் காம் நிறுவனத்தின் நிறுவனர் லயோனல் சார்லஸை சந்தித்தோம். அந்த உரையாடலில் இருந்து...
பள்ளிக்கல்வி சென்னையில் படித்தாலும், இளங்கலை கல்வியை அமெரிக்காவில் பயின்றவர். அக்கவுண்டிங் மற்றும் கணிப்பொறி அறிவியிலில் இளங்கலை பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் சிபிஏ முடித்தார். விமானம் ஓட்டுவதற்கான உரிமத்தையும் பெற்றார். பின்பு விமானத்துறையில் எம்பிஏ பட்டம் பெற்று லுப்தான்ஸா நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்துள்ளார்.
இந்தியாபைலிங்ஸ் நிறுவனத்துக் கான ஐடியா எப்படி உருவானது?
அப்பா சென்னையில் ஆடிட்டர். இங்கு வந்தவுடன் அப்பாவின் வாடிக்கையாளர்களுக்கு கடன் வாங்கித் தருவது, நிறுவனங்களை இணைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்துவந்தேன். வேறு எதாவது செய்யலாம் என்பது குறித்து யோசித்து வந்தேன். அமெரிக்காவில் புரதச் சத்து மாவை உற்பத்தி செய்து அதை இங்கு இறக்குமதி செய்து விற்கலாமா என்று முடிவெடுத்து அதற்காக வேலைகள் செய்தேன். நேரம், பல லட்ச ரூபாய் வரை செலவு செய்தாலும் அதனை இந்தியாவுக்குக் கொண்டு வர அனுமதி கிடைக்கவில்லை. அந்த அனுமதிக்கான சில பல மாதங்கள் அலைந்தேன்.
இப்போதைக்கு நமக்கு தெரிந் ததைத்தான் விற்க முடியும் என்று முடிவு செய்து இந்தியாபைலிங்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தேன். முதல் ஆறு மாதங்களுக்கு பெரிய ஏற்றம் இல்லை. இப்போ தைக்கு ஒரு நாளைக்கு 5,000 தொழில்முனைவோர் நிறுவனம் தொடங்குவதைப் பற்றி விசாரிக் கிறார்கள்.
நீங்கள் ஒரு பைலட், தவிர விமான போக்குவரத்து துறையில் எம்பிஏ படித்திருக்கிறீர்கள். அந்த துறையில் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லையா?
லுப்தான்ஸா நிறுவனத்திலேயே தொடர்ந்திருக்கலாம். அங்கு வேலை செய்யும் போதே அமெரிக்க ஏர்வேஸ் நிறுவனத்திலும் வேலை கிடைத்தது. ஒருவேளை நான் அமெரிக்க நிறுவனத்தில் இணைந்திருந்தால் இப்படி ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்க முடியுமா? சீனாவில் கேஎப்சி நிறு வனம் தொடங்கப்படுகிறது. அதில் பலர் நபர்கள் அங்கு செல்கிறார் கள். ஒருவரைத் தவிர மற்ற அனை வருக்கும் வேலை கிடைக்கிறது. அந்த வேலை கிடைக்காத நபர் ஜாக் மா. அவர்தான் பின்னாளில் அலி பாபா நிறுவனத்தை தொடங்கினார்.
எத்தனை நிறுவனங்கள் உங்கள் மூலமாக தொடங்கப்பட்டுள்ளன? அவை எந்த பகுதியில் தொடங்கப் பட்டிருக்கின்றன?
நாங்கள் இதுவரை 3,000 நிறு வனங்களை தொடங்கிக் கொடுத் திருக்கிறோம். இதில் 30% தொழில் நுட்ப நிறுவனங்கள். மீதமுள்ளவை வழக்கமான கடைகள், சிறு நிறுவனங்கள் போன்றவை. பெரும்பாலும் மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில்தான் தொடங்கப்பட் டிருக்கின்றன. தமிழ்நாடு மற்றும் சென்னையில் இருந்து 20% நிறு வனங்கள் தொடங்கப்பட்டுள்ளன
தொழில்தொடங்க என்னென்ன விஷயங்கள் தேவை?
தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கிறது. அதனால் எங்களது கால் சென்ட ருக்கு அழைப்பார்கள். தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகளை நாங்கள் வழங்குகிறோம். ஆனால் சிலர் என்ன தொழில் தொடங்கலாம் என்பது போல கேட்பார்கள். தொழில் தொடங்குவதற்கான ஐடியாவை நாங்கள் கொடுக்க முடியாதே. உங்களுக்கு என்ன தெரியும் என்ன இலக்கு என்பதை நாங்கள் எப்படி முடிவு செய்ய முடியும். தொழில் தொடங்குவதற்கான விஷயங்கள் மிக குறைவுதான். ஆனால் ஐடியாவும் தெளிவான திட்டமும்தான் முதலில் தேவை.
கம்பெனி தொடங்க குறைந்த பட்சம் இருவர் தேவை. பான்கார்டு, வங்கி ஸ்டேட்மென்ட், முகவரி சான்றிதழ், இது தவிர உங்கள் நிறு வனத்தின் பெயர், உங்கள் அலுவல கத்துக்கான இடம், அதற்கான என்.ஓ.சி. இருந்தால் இதை வைத்து நிறுவனத்தை தொடங்கிவிடலாம்.
நிறுவனம் ஆரம்பிப்பது எளிது. ஆனால் அதை பராமரிப்பது கடி னம். நிறுவனம் என்பது தொடங்கப் பட்டால் அதை முறையாக பரா மரிக்க வேண்டும். சரியான நேரத்தில் வரிதாக்கல் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். இல்லை என்றால் அபராதம் உள்ளிட்டவை இருக்கும். இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது.
சிறிய தொழில் செய்பவர்களுக்கு நிறுவனம் தொடங்குவது பற்றிய உங்களது ஆலோசனை என்ன?
மிகவும் சிறிய நிலையில் இருக்கும் பட்சத்தில் நிறுவனம் தொடங்க வேண்டாம் என்பதுதான் என் கருத்து. 50 லட்ச ரூபாய்க்கு ஆண்டு வருமானம் இருக்கும் பட்சத்தில் நிறுவனம் தொடங்கலாம் அல்லது அதற்கான வாய்ப்பு இருக் கிறது என்னும் பட்சத்தில் நிறு வனத்தை ஆரம்பிக்கலாம். ஆனால் பல சமயங்களில் அவ்வளவு பெரிய வர்த்தகம் நடந்தால் கூட பலர் நிறுவனம் தொடங்குவதில்லை.
ஒரு நபர் நிறுவனம் தொடங்க சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
ஒரு நபர் நிறுவனம் தொடங்க வேண்டும் என்றாலும், இரு நபர் கள் தேவை. ஒருவர் இயக்குநர். அந்த இயக்குநருக்கு மாற்றாக நிய மன இயக்குநர் தேவை. தவிர வருடத்துக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் டர்ன்ஓவர் இருக்கும் பட்சத் தில் அதனை கட்டாயமாக பிரை வேட் லிமிடெட் நிறுவனமாக மாற்ற வேண்டும். அதனால் பெரும்பா லும் பிரைவேட் லிமிடெட் நிறுவன மானமாகவே தொடங்குகிறார்கள்.
இந்தியாவில் தொழில்முனைவு சூழ்நிலை மேம்பட்டிருப்பதாக உலக வங்கி தெரிவித்திருக்கிறது. இன் றைய நிலைமை எப்படி இருக்கிறது?
இரு வருடங்களுக்கு முன்பு இருந்த இடத்தை விட மேம்பட் டிருக்கிறோம். தொழில் புரிவதற்கு தேவையான சூழல் மாறி வரு கிறது. ஆனால் இது போதுமா என்றால் நிச்சயமாக கிடையாது. இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் ஒருங்கிணைப்பு கிடையாது. ஒரு நிறுவனம் தொடங்கி செயல்பட பல அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
கம்பெனி விவகாரத்துறையிடம் சின் எண் வாங்குகிறோம். வருமான வரித்துறையிடம் பான் எண் வாங்குகிறோம். சேவை வரிக்கு ஒரு பதிவு, வாட் வரிக்கு, இ.எஸ்.ஐ.க்கு பதிவு செய்யவேண்டும். இவர்களிடம் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக செய்தால் நிறுவனங்களுக்கு வேலை முடியும். தொழிலில் கவனம் செலுத்தலாம்.
நிறுவனங்களின் காலாண்டரை எடுத்து பார்த்தால் ஒவ்வொரு வாரமும் ஏதாவது தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளன.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago