சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் டிஜிசெல்; ஆஹா டெக்னாலஜிஸ் அறிமுகம்

By செய்திப்பிரிவு

ஆஹா டெக்னாலஜிஸ் நிறுவனம் புதிதாக டிஜிசெல் எனும் இணையதளத்தின் மேம்பட்ட வடிவை உருவாக்கியுள்ளது. இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இணையதளம் வாயிலாக விற்பனை செய்ய உதவும் இ-காமர்ஸ் ஸ்டோராகும். இதன் மூலம் பி 2 பி, பி 2 பி 2 பி மற்றும் டி 2 சி என பல்வேறு தரப்பினருக்கும் பொருள்களை விற்பனை செய்ய முடியும்.

இந்த தளமானது பிரத்யேகமாக இப்பிரிவினருக்கென வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக பி 2 பி விலை நிர்ணயம் செய்யும் வசதியும் உள்ளது. அத்துடன் ஒப்பந்த முறை, கேட்டலாக் உருவாக்குவது, ஆர்டர் செய்வது, பொருள் டெலிவரியை கண்காணிப்பது மற்றும் ஆலையில் மூலப்பொருள் குறித்த ஸ்டாக் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டது. இந்த தளமானது இத்துறை மட்டுமல்ல மருத்துவம், உணவு விநியோகம், விவசாயம், உற்பத்தி, பேக்கேஜிங், நிறுவனங்கள் அளிக்கும் பரிசுப்பொருள் விநியோகம், கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த தளம் குறித்து ஆஹா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான அசோகன் சட்டநாதன் கூறியதாவது:

"சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள தொழில்கள் மிகவும் வியக்க வைப்பதாக உள்ளன. இப்புதிய தளமானது வழக்கமான விற்பனை முறையிலிருந்து ஆன்லைன் வர்த்தக முறைக்கு மாறுவதற்கு இது வழிவகுக்கும். ஆன்லைன் மூலம் விநியோக செயல்பாடுகள் அதிகரிக்கவும் இது வழிவகுக்கும்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா வைரஸ் தொற்று காரணமாக பெருமளவிலான தொழில்கள் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது. பல நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டன. அந்த நிலையிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டியதில்லை. டிஜிசெல் தளமானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கென உருவாக்கப்பட்டது. இத்துறை நிறுவனங்கள் தங்களது இலக்கை எட்ட பெரிதும் உதவும்

வாடிக்கையாளர்களின் வசதிக்காக இதை இலவசமாக உபயோகித்துப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதில், தங்களுக்கு எத்தகைய மாறுதல்கள் தேவை என்பதை இதைப் பயன்படுத்திப் பார்த்து தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தளத்திற்கு செல்வது மற்றும் இதை மேம்படுத்துவது, இதில் மேம்பட்ட வர்ஷனை பெறுவது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. தங்களது தொழில் இடையூறின்றி நடக்கவும், தகவல்கள் பாதுகாப்பாக இருக்கவும் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எந்த ஒரு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதே நிலையிலேயே சிறியதாக இருக்க விரும்புவதில்லை. தாங்களும் வளரவே விரும்பும். அதற்கேற்ற தொழில்நுட்ப வசதிகளைத்தான் டிஜிசெல் அளிக்கிறது. புதிய சந்தைகளை சென்றடைய இந்த தளம் உதவுகிறது. ஒரு தொழில் முனைவோருக்கு இ ஸ்டோரை தனியாக உருவாக்கி பராமரிப்பதைக் காட்டிலும் டிஜிசெல் மூலம் விற்பனையை செய்வது பல மடங்கு லாபகரமானதாக இருக்கும்.

இந்த தளமானது பன்முக வடிவமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் தகவலும் தனித்தனியாக பராமரிக்கப்படும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் பற்றிய தகவல் மற்றொருவருக்குத் தெரியாது. அவரால் தெரிந்து கொள்ள முடியாத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு பொருளாக இருந்தாலும் சரி, சேவையாக இருந்தாலும் சரி.

தொழில்துறை உதிரிபாகம், ஜவுளி, பேஷன் பொருள், அலுவலக ஸ்டேஷனரி, ஹவுஸ் கீப்பிங் சப்ளை உள்ளிட்ட அனைத்தையும் டிஜிசெல்-லில் பட்டியலிட முடியும். அனைத்துக்கும் மேலாக வாடிக்கையாளர்கள் தங்களது தயாரிப்பு சார்ந்த விவரங்களை, தொழில்நுட்ப தகவல்களை இதில் பட்டியலிட முடியும். தங்கள் தயாரிப்பு குறித்த விவரங்களை அளித்து வாடிக்கையாளரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

டிஜிசெல் தளமானது எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர்கள் பயன்படுத்தும் டேலி போன்ற சாஃப்ட்வேரிலிருந்து இதை எளிதாக இணைத்து பயன்படுத்த முடியும். இது தவிர எஸ்ஏபி, இஆர்பி அல்லது இதுபோன்ற பிற சாஃப்ட்வேர் அப்ளிகேஷனுடனும் இதை இணைத்து செயல்படுத்தலாம்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்