சீனாவின் தங்க கையிருப்பு 14 டன்கள் உயர்வு

By ராய்ட்டர்ஸ்

கடந்த அக்டோபர் மாதத்தில் சீனா மத்திய வங்கி தங்க கையிருப்பை 14 டன் அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாத இறுதியில் சீனா வசம் உள்ள தங்க கையிருப்பின் மதிப்பு 6,326 கோடி டாலர்கள் ஆகும். கடந்த செப்டம்பர் மாதத்தில் கைவசம் உள்ள தங்கத்தின் மதிப்பு 6,118 கோடி டாலர் ஆகும்.

கடந்த மாத இறுதியில் 1,722 டன் தங்கம் சீனா வசம் உள்ளது. இது செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 14 டன் அதிகமாகும். ஒவ்வொரு மாதமும் சீனாவின் மத்திய வங்கி தன்வசம் உள்ள தங்கம் பற்றிய தகவல்களை வெளியிடுகிறது. கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 19 டன் அளவுக்கு தங்கத்தை வாங்கியது.

தங்கம் கையிருப்பு வைத் திருக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா ஆறாவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, ஜெர்மனி, சர்வதேச செலாவணி மையம் (ஐஎம்.எப்), இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்து சீனா வசம் தங்கம் உள்ளது. சீனாவின் மொத்த அந்நிய செலாவணியில் தங்கத்தின் பங்கு இரு சதவீதத்துக்கு கீழ்தான் உள்ளது.

அமெரிக்கா 8,000 டன் அளவுக்கு தங்கம் வைத்திருக் கிறது. தன்னுடைய மொத்த அந்நிய செலாவணியில் 73 சதவீதம் தங்கமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்