நிதி திரட்டும் வகைகள்

By சொக்கலிங்கம் பழனியப்பன்

கடந்த வாரம் நிதி திரட்டுவதில் நான்கு வகைகளைக் கண்டோம். அதன் தொடர்ச்சியாக பிற நிதி திரட்டும் வகைகள் குறித்துக் காண்போம்.

சமூக நோக்குடைய ஃபண்டுகள் (SOCIAL IMPACT FUNDS):

நீங்கள் ஆரம்பிக்க போகும் தொழில் உங்களுக்கு லாபத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் சமூகத்தையும் மாற்றியமைக்கப் போகிறதென்றால், இதுபோன்ற நிறுவனங்கள் உங்களது தொழி லில் முதலீடு செய்ய முன் வருவார் கள்.

நீங்கள் செய்யப்போகும் தொழிலினால் ஒரு கிராமமோ அல்லது ஒரு பகுதியோ பொருளா தாராத்தில் முன்னேறும் என்றால் இந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள். அல்லது மருத்துவ வசதிகளே இல்லாத இடங்களில் உங்களது தொழிலி னால் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி கிட்டும் என்றால் அந்நிறுவனங்கள் முதலீடு செய்யும்.

முதலீட்டோடு மட்டு மல்லாமல் உங்களது நிறுவன வளர்ச்சிக்கும் இந்நிறுவனங்கள் கைகோர்த்துச் செயல்படும். இந்நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை/ லாபத்தை இரு வகையில் கணக்கிடுகின்றன. ஒன்று இம்பேக்ட் ஃபண்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் களுக்குக் கொடுக்கும் வருமானம். பொதுவாக இந்த வருமானம் ஆண்டிற்கு 10 சதவீதத்திற்குள் தான் இருக்கும்.

பிற முதலீடுகளைப் போல அபரிமிதமான வருமானம் இருக் காது. இரண்டாவது இவர்கள் செய்த முதலீட்டினால் எவ்வளவு நபர்களின் வாழ்க்கை சிறப்படைந் துள்ளது என்பதையும் கணக்கிடு வர். ஆகவே உங்களிடம் ஒரு நல்ல சமூகக் கண்ணோட்டமும் லாபமும் சேர்ந்த ஒரு பிஸினஸ் ஐடியா இருக்கிற தென்றால், இந்த நிறுவனங்களை அணுகலாம்.

கீழே இந்த வகையில் உள்ள சில நிறுவனங்களின் பெயர் களைக் கொடுத்துள்ளேன்: Ankur Capital, Upaya Social Ventures, Chilasa, Acumen Fund, Ennovent, Village Capital, & Many More...

வெஞ்சர் கேபிடல் (Venture Capital):

ஒரு காலத்தில் நமது இந்தியர்கள் புதுத் தொழில் தொடங்குவதற்கு மூலதனம் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதற்கு எதிர்மாறாக இன்று புதிய மற்றும் அதிக ரிஸ்க் உடைய தொழில்கள் தொடங்குவதற்கான பணம் வெஞ்சர் கேபிடல் நிறுவனங்கள் மூலம் தாராளமாகக் கிடைக்கிறது.

இந்நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்படும் தொழில்களுக்கு பங்கு மூலதனம் கொடுப்பதற்கு முன்வருகின்றன.

அதிக ரிஸ்க் அதே சமயத்தில் அதிக ரிவார்டு தரக்கூடிய தொழில்களுக்கு மூலதனம் கொடுக்கின்றன. நீங்கள் ஆரம்பிக்கப் போகும் தொழில் அதிக ரிஸ்க் உடையதாகவும், அதே சமயத்தில் அதீத வளர்ச் சியை குறுகிய காலத்திலேயே தரக்கூடியதாகவும் இருப்பின், இந்நிறுவனங்களை அணுகுங்கள். மூலதனம் தருவதோடு நிறுத்திக் கொள்ளாமல், நிறுவனத்தை மேலாண்மை செய்வதிலும் இந்நிறுவனங்கள் பங்கெடுக்கும். அதே போல் இந்நிறுவனங்களின் வருமான எதிர்பார்ப்பும் மிகவும் அதிகமாக இருக்கும். இன்னும் நிரூபணம் ஆகாத தொழில்களை நீங்கள் செய்ய முனையும் பொழுது, இது போன்ற நிறுவனங் களை நீங்கள் மூலதனத்திற்கு அணுகலாம்.

நீங்கள் தொழிலே ஆரம்பிக்காமல், இந்நிறுவனங் கள் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.

இந்நிறுவனங்களை நீங்கள் அணுகும்பொழுது, குறைந்த பட்சம் ஆரம்பிக்கப் போகும் தொழிலில் ஒரு கால்வாசி கிணற்றையாவது நீங்கள் தாண்டி யிருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்ச மற்றும் உச்சபட்ச முதலீட்டு அளவை வைத் துள்ளன.

மேலும் ஒவ்வொரு நிறு வனமும் ஒரு சில துறை சார்ந்த நிறுவனங்களில்தான் முதலீடு செய் யும். கீழே சில வெஞ்சர் கேபிடல் நிறுவனங்களின் பெயர்களை கொடுத்துள்ளேன்: Reliance Venture, Helion Venture Partners, Ventureast, IFCI Venture Capital Funds, Accel Partners, Nexus Venture Partners & Many More...

பிரைவேட் ஈக்விட்டி (Private Equity):

இந்நிறுவனங்கள் புதிதாக துவங்கப்படும் நிறுவனங்களுக்கு மூலதனம் கொடுப்பதில்லை. மாறாக ஏற்கனவே தொழில் நன்றாக செய்து கொண்டிருக்கக் கூடிய நிறுவனங்களின் வளர்ச்சிக் காக, மூலதனம் மற்றும் கடனைக் கொடுக்கின்றன.

இந்நிறுவனங்கள் நிரூபணம் ஆகாத தொழில்களில் பெரும் பாலும் முதலீடு செய்வதில்லை. சில சமயங்களில், பங்குச் சந்தை யில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களைகூட, பப்ளிக் பங்குதாரர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி பிரைவேட் டாக எடுத்துச் செல்வதும் உண்டு. இந்நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யக் கூடிய வல்லமை படைத்தவை.

நிறுவனங்கள் சந்தையில் இருந்து நிதி திரட்ட முடியாத போது இந்நிறுவனங்களை அணுகுவதும் உண்டு. இந் நிறுவனங்களின் முதலீடுகள் நீண்ட காலத்திற்கு, முதலீடு செய்த நிறுவனத்தில் இருக்கும் தன்மை உடையது.

ஆகவே பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களை புதிதாக தொழில் ஆரம்பிப்பவர்கள் அணுக வேண்டாம். நேரம்தான் செலவாகும். அதே சமயத்தில் ஏற்கனவே நன்றாக தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தங்களின் தொழில் வளர்ச்சிக்காக இந்நிறுவனங்களை பங்கு முதல் போடக் கூறி அணுகலாம். கீழே சில பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களின் பெயர்களை கொடுத்துள்ளேன்: Everstone, IDFC Private Equity, New Silk Route, ChrysCapital, Baring Private Equity Partners, SAIF Partners India, and Many More...

prakala@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

59 mins ago

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்