தனியார் கூட்டு முதலீடுகள் அவசியம்: ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

By ராய்ட்டர்ஸ்

ஆசியாவின் முக்கிய நாடான இந்தியாவின் பொது மற்றும் தனியார் கூட்டு முதலீடுகள் குறை வாக உள்ளதால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டார். அந்நிய நேரடி முதலீடுகள் அதிக அளவில் வரும்பட்சத்தில் இந்த தேக்க நிலையைப் போக்க முடியும் என நம்புவதாக ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ராஜன் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது:

இந்தியாவில் முதலீடுகள் கிடைப்பது தடையாக உள்ளதால் பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் காணப்படுகிறது.

உற்பத்தி நிறுவனங்கள் தங்களது திறனில் 30 சதவீதம் வரை குறைவான உற்பத்தி செய்கின்றன. தனியார் நிறுவனங்கள் புதிய திட்டங்களில் முதலீடுகள் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகிறது என்றும், தனியார் முதலீடுகளும் குறைந்துள்ளன. இதனால் அரசு முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என கணித்தது. ஆனால் ரிசர்வ் வங்கி 7.4 சதவீதம் முதல் 7.6 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளதாகவும், இது சீனாவுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேக்க நிலை மற்றும் மெதுவான வளர்ச்சி மற்றும் முதலீட்டு குறை ஆகியன இருந்தபோதிலும் அந்நிய நேரடி முதலீடுகள் அதிலும் குறிப்பாக கட்டமைப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதாக உள்ளது.

ஜனவரி முதல் ஜூன் வரையி லான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு 1,940 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 30 சதவீதம் அதிகமாகும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பகத் தன்மையின் அடையாளம் என்று அவர் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்