எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தங்களை நிறைவு செய்த மாநிலங்களில் தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
மத்திய செலவினத்துறை அறிவித்த, எளிதாக தொழில் தொடங்கும் சீர்திருத்தங்களை நிறைவு செய்து விட்டதாக குஜராத், உத்தரப் பிரதேம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களும் தற்போது அறிவித்துள்ளன.
இதையடுத்து தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் பரிந்துரையின் பேரில், இந்த 3 மாநிலங்களும், வெளிச் சந்தையில் ரூ.9,905 கோடிக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்டிக் கொள்ள செலவினத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு முன்பு ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தங்களை நிறைவு செய்து விட்டதாக அறிவித்திருந்தன. இதை தொழில் வளர்ச்சி துறையும் உறுதி செய்தது.
» நாடுமுழுவதும் 94,22,228 பேருக்கு கரோனா தடுப்பூசி
» ஜல்ஜீவன் திட்டம்: 3.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு
இந்த சீர்திருத்தத்தை நிறைவு செய்த 15 மாநிலங்களும், ரூ.38,088 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் வர்த்தக முதலீட்டை அதிகரிக்க, இந்தச் சீர்திருத்தம் மிக முக்கியமானது. எளிதாக தொழில் செய்யும் சூழல் மேம்பட்டால், நாட்டின் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடையும். அதனால் இந்த சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் எடுத்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago