தற்போதைய நிலையில் இருந்து நிதிப்பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்றால் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்த வேண்டும் என்று கிரிசில் தரச்சான்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2013-ம் நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 4.9 சதவீதமாக இருந்தது. 2014-ம் ஆண்டு 4.5 சதவீதமாக இருந்தது. இந்த நிலைமையில் இருந்து குறைக்க வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி. அவசியம் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஜி.எஸ்.டி. கொண்டுவரும் போது வரி மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் அதிக ரிக்கும். அதனால் நிதிப்பற் றாக்குறை குறையும் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. மேலும் இந்த வரி விதிப்பு முறை காரணமாக வியாபாரம் செய்வதற்கான செலவுகள் குறைந்து, முதலீட் டுக்கான சூழ்நிலை அதிகரித்து வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி.யை கொண்டு வருவது கடினம் என்றும், அதனால் நடப்பு நிதி ஆண்டின் நிதிப்பற்றாக்குறை 4.3 சதவீதம் என்ற நிலையிலே இருக்கும் என்றும் தெரிவிக்கிறது கிரிசில். ஆனால் அடுத்த நிதி ஆண்டில் ஜி.எஸ்.டியை கொண்டுவருவது அவசியம். இதனால் 2017ம் ஆண்டு நிதிப்பற்றாக்குறை 3.3 சதவீதமாக குறையும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago