நான்காவது நாளாக பங்கு சந்தையில் சரிவு

By செய்திப்பிரிவு

புகையிலை சார்ந்த பொருள்களுக்கு உற்பத்தி வரி அதிகரிக்கப்படும் என்பதால் ஐடிசி நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதனால் பங்குச் சந்தை சரிவுக்கு ஐடிசி முக்கிய காரணமாக அமைந்தது. இராக்கில் நிலவும் போர் பதற்றமான சூழலும் கூடுதல் வாய்ப்பாக சரிவுக்கு காரணமானது.

திங்கள்கிழமை வர்த்தகம் முடிவில் 74 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 25031 புள்ளிகளானது. வர்த்தகத்தின் இடையே 25000 புள்ளிகளுக்கு கீழே சென்றது சென்செக்ஸ். தொடர்ந்து நான்காவது நாளாக வர்த்தகத்தில் சரிவு காணப்பட்டது. நான்கு நாளில் மொத்தம் 489 புள்ளிகள் சரிந்துள்ளன.

இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 18 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 7493 புள்ளிகளானது. ஐடிசி நிறுவனப் பங்குகள் அதிகபட்சமாக 6.5 சதவீதம் சரிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு இப்போதுதான் இந்நிறுவன பங்கு அதிகபட்ச சரிவைச் சந்தித்துள்ளது. சிகரெட்டுகள் மீதான உற்பத்தி வரியை அதிகரிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என தெரிகிறது. இதனால் இந்நிறுவன பங்குகளோடு காட்ஃபிரே பிலிப் மற்றும் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலையும் சரிந்தன. சிகரெட்டுகள் மீது கடுமையான உற்பத்தி வரி விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய வரி விதிப்பு ஐடிசி மற்றும் விஎஸ்டி நிறுவனங்களின் வருவாயை மற்றும் லாபத்தை கடுமையாக பாதிக்கும் என்று ஐசிஐசிஐடைரக்ட்.காம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் விற்பனையாகும் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் 4.06 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன. வர்த்தகம் முடிய 30 நிமிஷம் இருந்தபோது அதிக அளவில் வர்த்தகம் நடந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 7500 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதேபோல மும்பைபங்குச் சந்தை 25 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது என்று பொனான்ஸா போர்ட்போலியோ நிறுவன ஆய்வாளர் நிதி சரஸ்வத் தெரிவித்தார்.

இராக்கில் நிலவும் போர் பதற்ற சூழலால் எண்ணெய் நிறுவன பங்குகள் ஏறுமுகத்திலிருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 220 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தன. முக்கியமான 30 முன்னணி நிறுவன பங்குகளில் 21 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 8 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இன்ஃபோசிஸ் 2.55%, ஹிந்துஸ்தான் யூனிலீவர் 1.03%, டிசிஎஸ் 0.95%, விப்ரோ 0.93% அளவுக்கு சரிந்தன.

பங்குச் சந்தையில் மொத்தம் 1,562 நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றன. 1,387 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.124 நிறுவனப் பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்