வர்த்தகம், முதலீடு குறித்து இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே முதலாவது உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஐக்கிய ஐரோப்பிய நிர்வாகத் துணைத் தலைவரும், வர்த்தக ஆணையருமான வேல்டிஸ் டாம்ப்ரோவ்ஸ்கிஸ் ஆகியோர் தலைமையில் முதலாவது உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து அமைச்சர்கள் அளவிலான ஆலோசனைகளை வலியுறுத்தி, கடந்த 2020 ஜூலை மாதம் நடைபெற்ற 15-வது இந்திய- ஐக்கிய ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாட்டின் முக்கிய வெளிப்பாடாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது, கோவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் வலியுறுத்தியதோடு, இதுபோன்ற நெருக்கடி தருணத்தில் விரைந்து வர்த்தக சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
» மே.வங்க விவசாயிகளுக்கு மம்தா அநீதி இழைத்துவிட்டார்: பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் கூடுதல் வாய்ப்புகளை ஆய்வு செய்வது குறித்து அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டு அமைச்சர்களிடையே முடிவு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago