நடுத்தர வர்க்கத்தினரும் வைர நகை வாங்கலாம்: கீர்த்திலால் காளிதாஸ் நிர்வாக இயக்குநர் பேட்டி

By கா.சு.வேலாயுதன்

ஒரு காலத்தில் கோடீஸ்வரர்களின் ஆபரணமாகக் கருதப்பட்ட வைர நகைகளை இன்று நடுத்தர பிரிவு மக்களும் வாங்கிப் பயன்படுத்தலாம். ரூ. 10 ஆயிரத்துக்குக் கூட வைர நகைகள் கிடைப்பதாக கீர்த்திலால் காளிதாஸ் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்வராஜ் தெரிவித்தார்.

வைரச் சுரங்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால் பிற நிறு வனங்களைவிட 10 சதவீதம் குறைந்த விலையில் வைர நகைகளை தங்களால் தர முடிவதாக இவர் கூறினார். இதனால் ரூ.10 ஆயிரம், 15 ஆயிரத்திற்கும் கூட வைரக் கம்மல், வைர மோதிரம் வாங்க முடியும் என்று அவர் மேலும் கூறினார். வைரநகை வர்த்தகம் குறித்து கீர்த்திலால் காளிதாஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஸ்வராஜ் `தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

இந்தியாவில் கோல்கொண்டா, பன்னா ஆகிய இடங்களில் இருந்த சுரங்கங்களில் வைரம் கிடைக்காததால் அவற்றை மூடிவிட்டனர். தற்போது ஆப்பிரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள வைரச் சுரங்கங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம். 90 சதவீத வைரத்தை இங்கிருந்துதான் இறக்குமதி செய்கிறோம்.

எங்களது தாத்தா கீர்த்திலால் காளிதாஸ் மேத்தா 1939-ம் ஆண்டு வைர விற்பனைக் கடை ஆரம்பித்தார். 50 ஆண்டுகள் கழித்தே தங்க நகை விற்பனைக் கடை ஆரம்பித்தார்.

1970-ல் எங்களது மாமா பெல்ஜியத்தில் தங்கம், வைரம் வியாபாரத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சீனாவில் எங்கள் வைர தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு அங்கு வைரங்கள் கட்டிங், பாலீஷ் வேலைகளில் 6 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கோயமுத்தூர் ஆலையில் 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

கோவையில் இரண்டு விற்பனையகமும், மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் தலா ஒரு விற்பனையகமும் உள்ளன. ஆப்பிரிக்காவில் போர்ட்ஸ் லானாவில் 300 ஊழியர்களுடன் இப்போது வைர நகைகள் விற் பனை நிலையத்தை ஆரம்பித் துள்ளோம்.

பெரிய அளவில் வைர வியா பாரம் நடப்பது சீனாவில்தான். அங்கே முன்னணி தொழில்நுட்பக் கருவிகள், தொழில்நுட்ப வல்லு நர்கள் உள்ளனர். அவர்களைக் கொண்டு உலகத் தரத்திற்கான வைரங்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எங்களுக்கு நான்கு தலை முறை வாடிக்கையாளர்கள் உள்ள னர். முன்பு தங்கத்திற்கு அதிக மவுசு இருந்தது தற்போது வைர நகைகளின் பக்கம் வந்து கொண் டிருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.40 ஆயிரமாக இருந்த ஒரு காரட் வைரம் இப்போது ரூ.70 ஆயிரமாக உள்ளது. இது மேலும் அதிகரிக்குமே தவிர இறங்குவது சாத்தியமில்லை.

அதனால் 2009-க்கு முன்பு ஒரு நாளைக்கு 10 பேர் வைரம் வாங்கினார்கள் என்றால் இப்போது 25 பேர் வைரம் வாங்குகின்றனர். இதற்காகவே நாங்கள் எங்களது கம்பெனியில் விலை மலிவு, தரம் மிகுதி என்ற எண்ணத்தில் வைர நகைகளை விற்பனை செய்கிறோம். ஒரு கேரட் வைரம் ரூ.70 ஆயிரத்திற்கு கொடுத்து வந்ததை தற்போது ரூ.60 ஆயிரத்திற்கு கொடுக்கிறோம்.

வைரங்கள் வாங்கினால் தோஷம், வீட்டுக்கு ஆகாது என்ற கருத்து மூட நம்பிக்கை. இப்போது அப்பழக்கம் மாறிவிட்டது. குறிப்பாக தென்னிந்தியர்கள் தரத்தைத்தான் முக்கியமாகப் பார்க்கிறார்கள் என்றார் ஸ்வராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

58 mins ago

வணிகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

வணிகம்

5 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்