இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவாக மே மாதத்தில் 6.01 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்தில் இது 5.20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருள்கள், எரிபொருள்களின் விலை உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். 2013 மே மாதத்தில் பணவீக்கம் 4.58 சதவீதமாக இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் 10.53 சதவீதம் உயர்ந்தது. டீசல் விலை 14.21 சதவீதம் உயர்ந்தது இதற்கு முக்கியக் காரணமாகும். வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்ட அட்டவணையில் பெட்ரோல் விலை 12.28 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உணவுப் பணவீக்கம் 9.50 சதவீதம் உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு விலை 31.44 சதவீதமும், பழங்களின் விலை 19.40 சதவீதமும் பால் பொருள் விலை 9.57 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டது. பருவமழை குறைவு என்ற தகவல், இராக்கில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளும் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
பணவீக்கம் அதிகரிப்புக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு முக்கியக் காரணியாக உள்ளது. இந்த ஆண்டு பருவமழை எல் நினோ விளைவால் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தனால் உணவுப் பொருள் உற்பத்தி குறையும். உணவுப் பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயமாக இருக்கும் என்று ஃபிக்கி அமைப்பின் தலைவர் சித்தார்த் பிர்லா தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக பணவீக்கம் தொடர்ந்து இருந்து வருவதையும் பிர்லா சுட்டிக்காட்டினார்.
கடந்த மார்ச் மாதத்தின் பணவீக்கம் திருத்தி மதிப்பீட் டின்படி 6 சதவீதமாக இருந்தது. முன்னர் இது 5.70 சதவீதம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது இப்போ தைய அரசுக்கு முக்கிய மான சவாலாக இருக்கும் என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்தார்.
உணவுப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு பன்முக உத்திகளைக் கையாள வேண்டும். அதில் பொருள்களின் விலை சட்டம், விநியோகத்தில் தடங்கல் இல்லாத சூழல், உள் பொருள் களுக்கான மானியத்தை ஒரே சீராக்குவது ஆகியன இதில் அடங்கும் என்றும் பானர்ஜி சுட்டிக் காட்டியுள்ளார். வேளாண் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பணவீக்கம் உயர்ந்துள் ளதால், கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காது என்றே தோன்றுகிறது. பணவீக் கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தொடர்ந்து 2 கொள்கை அறிவிப்புகளில் வட்டி விகிதத்தில் எவ்வித மாறுதலையும் ஆர்பிஐ மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago