உணவு தானிய கொள்முதல்: 80.35 லட்சம் விவசாயிகள்; ரூ.107572.36 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை

By செய்திப்பிரிவு

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது காரீப் பருவத்திற்கான உணவு தானியங்களின் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

காரீப் 2020-21 பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், ஜார்க்கண்ட், அசாம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில் கடந்த 18.01.2021 வரை, 569.76 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு, இதே காலத்தின் கொள்முதலை விட 23.83 சதவீதம் அதிகமாகும். இந்த கொள்முதல் மூலம் 80.35 லட்சம் விவசாயிகள், ரூ.107572.36 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.

மேலும் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 51.66 இலட்சம் மெட்ரிக் டன் பருப்பு, எண்ணெய் வித்துக்களைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியாணா, ராஜஸ்தானிலிருந்து கடந்த 18.01.2021 வரை 297924.90 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயா பீன்ஸ் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் 159812 விவசாயிகள், ரூ. 1619.73 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.

இதே போல் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து கடந்த 18.01.2021 வரை 5089 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய், 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 52.40 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்