அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கு நேர்காணல்

By செய்திப்பிரிவு


அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர் பொறுப்புக்கு, “நேரடி ஆட்தேர்வு” நடத்தப்படவுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் அரக்கோணம் கோட்டம் (631 001) அரசு மருத்துவமனை அருகிலுள்ள அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 2021 பிப்ரவரி 01 அன்று காலை 10 மணிக்கு நேரில் வரலாம்.

கீழ்காணும் தகுதியுடையோர் அஞ்சலக ஆயுள் காப்பீடு / கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர்களாக தேர்வு செய்யப்படுவதற்கான நேர்முக ஆட்தேர்வில் பங்கேற்கலாம்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்தப் பணிக்கான வயது வரம்பு 18-லிருந்து 50 வரை.

வேலைவாய்ப்பற்றோர் / சுயவேலைவாய்ப்பு பெற்ற படித்த இளைஞர்கள், முன்னாள் வாழ்வியல் ஆலோசகர்கள் / எந்தவொரு காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் ஏஜென்டுகள், முன்னாள் படைவீர்ர், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய உதவிக் குழு நிர்வாகிகள், கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என மேற்காணும் தகுதியுடைய விருப்பமுள்ள எந்தவொரு நபரும் நேர்முக ஆட்தேர்வில் பங்கேற்கலாம்.

காப்பீடு விற்பனையில் அனுபவம் உடையோர், கணினி அறிவு / உள்ளூரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஒப்புதல் அளிக்கப்பட்ட விகிதங்களில் ஊக்கத்தொகைகள் அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரக் குறிப்பு, வயது, கல்வி, அனுபவம் தொடர்பான அசல் சான்றிதழ் மற்றும் நகலுடன் ஆட்தேர்வுக்கு வர வேண்டும்.

மேற்கண்ட தகவலை, அரக்கோணம் அஞ்சல் கண்காணிப்பாளர் கே சிவ சங்கர் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்