மெட்ரோ ரயில் நிலையங்களில் பயோடயஜெஸ்டர் தொழில்நுட்பம்: மகா-மெட்ரோவுடன் டிஆர்டிஓ புரிந்துணர்வு ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

இந்திய அரசின் முன்னணி ஆராய்ச்சி முகமையான பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (டிஆர்டிஓ), இந்திய, மகாராஷ்டிர அரசுகளின் கூட்டு நிறுவனமான மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் (மகா-மெட்ரோ) தண்ணீர் சேமிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இணைந்து பணிபுரிந்து வருகின்றன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத உயிரிசெரிமான (பயோ டயஜெஸ்டர்) இயந்திரங்களை (சாக்கடையில்லாத தூய்மை தொழில்நுட்பம்) தனது நிலையங்களில் மகா-மெட்ரோ நிறுவி வருகிறது.

மெட்ரோ ரயில் மையங்களில் மனிதக் கழிவுகளை கையாள்வதற்காக மேம்படுத்தப்பட்ட பயோ டயஜெஸ்டர் (எம்கே-II) தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆதரவை டிஆர்டிஓ வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே இன்று கையெழுத்தானது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன தலைமை இயக்குநரும், உயிர் அறிவியல் துறை மூத்த விஞ்ஞானியானியுமான டாக்டர் ஏ கே சிங், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரிஜேஷ் தீக்‌ஷித் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, குறைந்த செலவிலான, பசுமை தொழில்நுட்பமான பயோ டயஜெஸ்டர் இடத்தையும், தண்ணீரையும் சேமிக்கிறது. 2.40 லட்சம் பயோ டயஜெஸ்டர்களை இந்திய ரயில்வே ஏற்கனவே நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்