தொடர்ந்து இரண்டு தினங்களாக சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை எழுச்சி பெற்றது. பிற்பகல் வரையில் பங்குச் சந்தையில் ஊசலாட்டம் நிலவியது. ஆனால் மாலையில் வர்த்தகம் முடிய ஒரு மணி நேரம் இருந்த நிலையில் ஏறுமுகம் காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 330 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 25521 புள்ளிகளைத் தொட்டது. வங்கித் துறை பங்குகள் மற்றும் எரிவாயு நிறுவனப் பங்குகள் உயர்ந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
உலோகம், ஆட்டோமொபைல் நிறுவன பங்குகளும் ஏற்றம் பெற்றன. கடந்த ஆண்டைப் போல எத்தகைய மோசமான சூழ்நிலையையும் சமாளிப்பதற்குத் தயாராக அரசு உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உறுதிபடக் கூறியதும் பங்குச் சந்தை எழுச்சிக்குக் காரணமாகும்.
தேசிய பங்குச் சந்தையில் 98 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 7631 புள்ளிகளாக உயர்ந்தது. மிட்கேப் குறியீடு 1.5 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 2 சதவீத அளவும் உயர்ந்தன.
ரிசர்வ் வங்கி டாலரை விற்க கூடும் என்ற தகவலால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து முடிவடைந்தது. 12 பைசா உயர்ந்து வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 60.03 ரூபாயில் முடிவடைந்தது.
ஓஎன்ஜிசி பங்கு அதிகபட்சமாக 4.07 சதவீதம் உயர்ந்து ரூ. 444.55-க்கு விற்பனையானது. இதைப் போல ஆக்ஸிஸ் வங்கிப் பங்கு 3.79 சதவீதம் உயர்ந்து ரூ. 1,839.45-க்கும், பாரத ஸ்டேட் வங்கி பங்கு 2.91 சதவீதம் உயர்ந்து ரூ. 2,654.40-க்கும், கோல் இந்தியா 2.89 சதவீதம் உயர்ந்து ரூ.400.65-க்கும், பிஹெச்இஎல் பங்கு 2.84 சதவீதம் உயர்ந்து ரூ. 247.95-க்கும் விற்பனையாயின.
அதேசமயம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்கு 1.66 சதவீதம் சரிந்து ரூ. 1,180.80-க்கும், ஹீரோ மோட்டோகார்ப் 0.83 சதவீதம் சரிந்து ரூ. 2,589.20-க்கும், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் பங்கு விலை 0.58 சதவீதம் சரிந்து ரூ.2,409-க்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு விலை 0.53 சதவீதம் சரிந்து ரூ.629.95-க்கும், பஜாஜ் ஆட்டோ 0.47 சதவீதம் சரிந்து ரூ. 2,162.40-க்கும் விற்பனையானது. ஆசிய பிராந்தியத்தில் ஜப்பானின் நிக்கி 0.29 சதவீதம் உயர்ந்தது. சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தை 0.92 சதவீதமும், ஹாங்காங்கின் ஹாங் செங் 0.42 சதவீதமும் சரிந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago