ஜிஎஸ்டி பற்றாக்குறை; ஜார்கண்டைத் தவிர அனைத்து மாநிலங்களும் 1 விருப்பத் தேர்வு

By செய்திப்பிரிவு

ஜார்கண்டைத் தவிர அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிப்பதற்கு விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செயல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய இரு விருப்பத் தேர்வுகளில் விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்திருப்பதாக சட்டீஸ்கர் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஜார்கண்டைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும், சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களும் (தில்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) விருப்பத் தேர்வு-1-ஐத் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விருப்பத் தேர்வு-1-ஐத் தேர்ந்தெடுத்துள்ளதால், ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சிறப்பு சாளரம் மூலம் இம்மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும்.

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இந்தச் சாளரத்தின் மூலம் இம்மாநிலங்களின் சார்பாக, இந்திய அரசு ரூ 30,000 கோடியைக் கடனாக வாங்கி, அதை ஐந்து தவணைகளில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது.

சிறப்பு சாளரத்தின் மூலம் ரூ.9627 கோடி கடனாகப் பெற தமிழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, ரூ.2171.90 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்