பூட்டானில் ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத்தை பிரதமரும், பூட்டான் பிரதமரும் தொடங்கி வைத்தனர்.
ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூட்டான் பிரதமர் லயன்ச்சென் டாக்டர் லோட்டே ஷெரிங் ஆகியோர் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தனர்.
பூட்டானுக்கு அரசுமுறை பயணமாக ஆகஸ்ட் 2019-இல் பிரதமர் சென்றிருந்த போது ரூபே திட்டத்தின் முதல் பகுதியை இரு பிரதமர்களும் தொடங்கி வைத்தனர். ரூபே அட்டைகள் பூட்டானில் செயல்படுத்தப்பட்டதன் மூலம் பூட்டான் முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்கள் மற்றும் விற்பனை முனையங்களை இந்தியாவில் இருந்து பூட்டானுக்கு செல்பவர்கள் பயன்படுத்த முடியும்.
இத்திட்டத்தின் இராண்டாம் கட்டம் மூலம் பூட்டானில் இருந்து இந்தியா வருபவர்கள் இங்குள்ள ரூபே மையங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பகிர்ந்து கொள்ளப்படும் கலாச்சார பாரம்பரியம் மற்றும் மக்களிடையே உள்ள வலுவான உறவுகளின் மூலமான பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையின் அடிப்படையில் இந்தியா மற்றும் பூட்டானுக்கிடையே சிறப்பான நட்புறவு நிலவும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago