தொலைகாட்சிகளின் தர மதிப்பீடு; ஆய்வு செய்ய குழு அமைப்பு

By செய்திப்பிரிவு

தொலைகாட்சிகளின் தரத்தை மதிப்பிடும் முகமைகள் நடமுறைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

‘’2014-ம் ஆண்டின் இந்திய தொலைகாட்சிகளின் தர முகமைகளுக்கான நடைமுறைகள்”-ஐ ஆய்வு செய்ய பிரசார் பாரதி தலைமை செயல் அதிகாரி தலைமையில் நால்வர் கொண்ட குழுவை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இப்போது உள்ள நடைமுறைகள், தொலைகாட்சி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் தொலைகாட்சி தர புள்ளிகளுக்கான குழு, நாடாளுமன்ற குழு ஆகியவற்றுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொண்டதன் அடிப்படையில் இந்திய தொலைகாட்சி தர முகமைகளுக்கான நடைமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டதாகும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில், அந்த நடைமுறைகளை மீண்டும் புதிதாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை எழுந்திருப்பது அறியப்பட்டது. குறிப்பாக, இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் அண்மைகால பரிந்துரைகளான தொழில்நுட்ப முன்னேற்றங்கள்/தலையீடுகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கான முறை மற்றும் வெளிப்படையான, நம்பகத்தன்மையான தர முறைக்கான நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதைக் கருத்தில் கொண்டும் புதிதாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

அதன்படி, இந்தியாவில் தொலைகாட்சி தர முறையின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவானது குறிப்பிட்ட காலத்துக்கு ஆய்வு செய்யும். ஏற்கனவே இருக்கும் முறை பற்றி இந்த குழு மதிப்பீடுகள் மேற்கொள்ளும். அவ்வப்போதைய சமயங்களில் அறிவிக்கப்படும் தொலைகாட்சி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள், ஒட்டு மொத்த தொலைகாட்சி தொழில்துறை செயல்கள் மற்றும் துறையின் பங்கெடுப்பாளர்களின் தேவைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பதுடன், வலுவான, வெளிப்படையான, பொறுப்புடமை கொண்ட தர முறையை செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த குழு வழங்கும்.

கீழ் குறிப்பிட்டபடி குழு அமைக்கப்பட்டுள்ளது.

1) சஷி எஸ்.வெம்பதி, தலைமை நிர்வாக அதிகாரி, பிரசார் பாரதி –தலைவர்

2) டாக்டர் ஷலப், புள்ளியியல் பேராசிரியர், கணிதம் மற்றும் புள்ளியியல் துறை, ஐஐடி, கான்பூர்-உறுப்பினர்

3) டாக்டர் ராஜ்குமார் உபாத்யாய், செயல் இயக்குனர், சி-டாட்-உறுப்பினர்

4) பேராசிரியர் புலக் கோஷ், பொதுக்கொள்கைக்கான தீர்வு அறிவியல் மையம்(சிபிபி)-உறுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்