நிலுவைத்தொகை முழுமையாக வேண்டும்:  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.

நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.2.35 லட்சம் ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் கணக்கீட்டின் படி ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் ஏற்பட்ட இழப்பு ரூ.97,000 கோடியாகும் மீதி ரூ.1.38 லட்சம் கோடி இழப்பு கரோனா வைரஸினால் ஏற்பட்டது என்று மத்திய அரசு கருதுகிறது.

இதில் ரூ.97,000 கோடி இழப்பீட்டை மாநிலங்கள் ஆர்பிஐ உருவாக்கும் சிறப்பு சாளரம் மூலம் திரட்டிக் கொள்ளவும், அல்லது 2.35 லட்சம் தொகையை சந்தையிலிருந்து கடனாக வாங்கிக் கொள்ளவும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

ஆனால் பாஜக ஆட்சியல்லாத மாநிலங்களான கேரளா, மேற்கு வங்கம், டெல்லி, தெலங்கானா, சத்திஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு பரிந்துரைகளை ஏற்கவில்லை.

ஜிஎஸ்டி வரி அமைப்பு என்பது 5, 12, 18, மற்றும் 28% என்ற அடுக்குமுறையில் உள்ளது. இதோடு ஆடம்பர பொருட்கள் மீது கூடுதல் செஸ் விதிக்கப்பட்டு இது மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புக்கு அளிக்கப்படுவதற்காக சேர்த்து வைக்கப்படும், இதுதான் வழக்கம்.

மத்திய அரசு 2019-20-ல் ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.1.65 லட்சம் கோடி அளித்துள்ளது. ஆனால் இதே காலக்கட்டத்தில் வசூலான செஸ் வரி ரூ.95, 444 கோடி மட்டுமே.

2018-19க்கு ரூ.69,275 கோடியும் 2017-18-க்கு 41,146 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய தேதியில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு ரூ.1.51 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் 42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு கடன் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசின் அறிவுறுத்தலை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வலியுறுத்தின. ஜிஎஸ்டி மாநில இழப்பீடுகளை அளிக்காமல் அதை வேறு பயன்களுக்கு உபயோகப்படுத்தி சட்டத்தை மீறியுள்ளதாக புகார் தெரிவித்தன. இதனால் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை. மீண்டும் அக்டோபர் 12-ம் தேதி கூடி விவாதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்