கரோனா பாதிப்பால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவடைந்ததைப் பயன்படுத்தி ரூ 5,000 கோடியை சேமித்துள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தீவிரவாத எதிர்ப்புக் குழு நடத்திய எரிசக்தி பாதுகாப்பு மாநாட்டில் இன்று பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார். எரிசக்தி துறையில் தற்சார்பை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த எரிசக்தி பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கும் நமது முயற்சிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்த தற்சார்பு இந்தியா இயக்கம் வலுவூட்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவிய கச்சா எண்ணெயின் குறைவான விலையைச் சாதகமாக்கி ரூ 5,000 கோடியை நாடு சேமித்தது என்றும் அவர் கூறினார்.
» கர்நாடகா சட்ட மேலவைத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» பிஹார் தேர்தலில் உதயமாகும் மூன்றாவது அணி? - புதிய கூட்டணி; ஒவைஸி அறிவிப்பு
கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பதை குறைப்பதற்கு ஐந்துமுனை திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.
கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில், பாதுகாப்பான, வலிமையான, தூய்மையான மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய எரிசக்தி அமைப்பை உருவாக்க நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
45 mins ago
வணிகம்
5 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago