முன்னுரிமை தொழில்களுக்கு வங்கிகள் மூலம் அதிக கடன் கிடைப்பதற்கு வசதியாக திருத்தப்பட்ட வழிகாட்டு முறைகளை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிறு, குறு நடுத்தர விவசாயிகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பிற தொழில்களுக்கும் கடன் கிடைக்க வழியேற்பட்டுள்ளது.
வங்கிகள் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகபட்சம் ரூ.50 கோடி வரை கடன் பெற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. விவசாயப் பணிகளில் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பம்ப் செட்களை இயக்க சூரிய ஆற்றல் மின்வசதி அமைக்கவும், நிலைப்படுத்தப்பட்ட உயிரி எரிவாயு (பயோ கேஸ்) பிளான்ட்கள் அமைக்கவும் கடன் வழங்கப்படும். இவற்றுக்கு முன்னுரிமை தொழில் அடிப்படையில் புதிதாக கடன் வழங்கப்படும்.
முன்னுரிமை தொழில்களுக்கு கடன் கிடைப்பதில் பிராந்திய அளவில் வேறுபாடு ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காக ஏற்கெனவே கண்டறியப்பட்ட மாவட்டங்களில் முன்னுரிமை தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன் அளவில் மேலும் கூடுதலாக கடன் வழங்கவும் புதிய வழிகாட்டு நெறிகள் வகை செய்துள்ளன.
சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஏழ்மை நிலையில் இருப்போர் விகிதம் தற்போது அதிகரித்து வருகிறது. இதைப் போக்க அதிக அளவில் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வேளாண் உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், சந்தை வாய்ப்புள்ள வேளாண் அமைப்புகள் ஆகியவற்றுக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்யுமாறு புதிய வழிகாட்டு நெறியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மரபு சாரா எரிசக்தி சார்ந்த திட்டங்களுக்கு கடன் அளவு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. சுகாதார கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தவும், ஆயுஷ்மான் பாரத் திட்டங்களுக்கான கடன் ஒதுக்கீடும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago