ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம்; மத்திய அரசு ஆலோசனை

By செய்திப்பிரிவு

ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை இன்று ஆலோசனை நடத்தியது.

பொது விநியோக முறை சீர்திருத்தங்களுக்கான திட்டங்கள் குறித்த செயலாளர், உணவு மற்றும் பொது விநியோகத் தலைவர்கள் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டம் நடைபெற்றது.

பொது விநியோக முறை சீர்திருத்தங்களுக்கான திட்டங்கள் தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டத்திற்கு இன்று தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலாளர், தலைமை நிர்வாக அதிகாரி (இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI), தலைமை இயக்குநர் (தேசிய தகவல் மையம் (NIC), நான்கு மாநிலங்களின் உணவுத்துறைச் செயலாளர்கள் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MediY) மற்றும் உணவு கார்ப்பரேஷன் இந்தியா (FCI) உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளிக்க பொது விநியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மை (IM - PDS) விரிவாக்கம், இதன் கீழ் 'ஒரே இந்தியா ஒரே ரேஷன் அட்டை' (ONORC) திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுவதற்காக நடைபெற்றது.

பொது விநியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மையின் (IM - PDS) கீழ் செய்யப்படும் பணிகள் தொடரப்படுவதையும், மேலும் வலுப்படுத்தப்படுவதையும் உறுதிசெய்யும் நோக்கில், மார்ச் 2021க்கு அப்பால் நீட்டிப்புக்கு இது பரிசீலிக்கப்படுகிறது.

நியாய விலைக் கடை தானியங்கி முறையில், ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் (ONORC), ஆதார் செயல்படுத்தல் / சேர்ப்பு மற்றும் மொபைல் பயன்பாட்டின் மேம்பாடு ஆகியவற்றை புலம்பெயர்ந்த தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகள் தங்களை பதிவு செய்து ஒரே தேசம் ஒரே ரேசன் அட்டைத் திட்டத்தின் முழு நன்மையையும் பெற உதவும் நோக்கில் அதிகாரமளித்தல் குழு ஆய்வு செய்தது.

பொது விநியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மையின் (IM - PDS) முன்மொழியப்பட்ட நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் நிதி தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

மேலும்