கரோனா காலத்தில் குறையாத சாகுபடி: கடந்த ஆண்டை விட 7.15% அதிகம்

By செய்திப்பிரிவு

காரீஃப் பருவ பயிர்கள் இன்று வரை 1082.22 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தோடு ஒப்பிட இந்த ஆண்டு 7.15% கூடுதல் நிலப்பரப்பில் பயிரிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரீஃப் பருவகாலப் பயிர்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பு: 28.08.2020 வரையிலான காரீஃப் பருவகாலப் பயிர்கள் மொத்தமாக 1082.22 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டு இந்தியாவில் 7.15 சதவீதம் கூடுதல் நிலப்பரப்பில் காரீஃப் பருவ பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பயிரும் எந்த அளவிலான நிரப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன என்ற விவரம் கீழே தரப்படுகின்றன:

நெல்: இந்த ஆண்டு 389.81 இலட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 354.41 இலட்சம் ஹெக்டேரில்தான் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. அதாவது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 35.40 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

பருப்புகள்: இந்த ஆண்டு 134.57 லட்சம் ஹெக்டேரில் பருப்புகள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 128.65 லட்சம் ஹெக்டேரில் தான் பருப்புகள் பயிரிடப்பட்டிருந்தது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 5.91 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பருப்பு பயிரிடப்பட்டுள்ளது.

எண்ணெய் வித்துக்கள்: இந்த ஆண்டு 193.29 லட்சம் ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 170.99 இலட்சம் ஹெக்டேரில் தான் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டிருந்தது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 22.30 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுள்ளது.

பருத்தி: இந்த ஆண்டு 128.41 இலட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 124.90 இலட்சம் ஹெக்டேரில்தான் பருத்தி பயிரிடப்பட்டிருந்தது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 3.50 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்