ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்: மாநிலங்களுக்கான வருவாய் இழப்பை ஈடுசெய்வது குறித்து ஆலோசனை

By செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் தற்போது நடைபெற்று வருகிறது.மாநிலங்களுக்கான வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு ஆலோசிக்கப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது. காணொலி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு நிதி வழங்க உள்ளதாக ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது மத்திய அரசு உறுதியளித்தது.

கடந்த நிதியாண்டில் 1,65,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், 95,444 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே கூடுதல் வரி வசூலிக்கப்பட்டது. தற்போது கரோனா நெருக்கடியால் அரசுக்கு ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது. இதனால் இழப்பீட்டு தொகையை வழங்குவதில் மத்திய அரசு சிக்கலை சந்தித்து வருகிறது.

ஆனால், இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இழப்பீட்டுத் தொகைக்காக மாநிலங்கள் கடன் வாங்கிக் கொள்ள அனுமதிப்பது குறித்தும், அதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இழப்பீட்டுக்காக கூடுதல் வரி விதிக்கப்படும் பட்டியலில் கூடுதலாக பொருட்களை சேர்க்கலாமா அல்லது கூடுதல் வரியை அதிகரிக்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்