பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி சம்பந்தப்பட்ட சொத்துகளை விற்று கடனை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.24.33 கோடி பெறப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்திடம் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க சட்டப்பிரிவு 11-ன் படி கடன் வாங்கியவரின் சொத்துகள் விற்று பணமாக்கப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.82.66 கோடி மதிப்புள்ள சொத்துகள் விற்கப்பட்டு பணமாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பிற கடன் நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக கூறியுள்ளது.
மேலும் கடன் வாங்கிய நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோரின் நிறுவனங்களின் கணக்குகளில் இருந்தும் பணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையை அமைச்சகம் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளது.
கடந்த 2018-ல் நீரவ் மோடிக்குச் சொந்தமான ஃபயர்ஸ்டார் டைமண்ட், ஏ.ஜாஃபி மற்றும் ஃபேன்டசி ஆகிய 3 நிறுவனங்களும் சட்டப்பிரிவு 11-ன்படி திவால் பாதுகாப்பு கேட்டு நியூயார்க்கின் தென் மாகாண நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கி, நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்திடம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்தின் உதவியை நாடியது.
இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க திவால் நீதிமன்றம் பிஎன்பி வங்கிக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. இந்நிறுவனங்
களைச் சார்ந்த அமெரிக்க ஊழியர்கள் இந்த மோசடியில் பங்கெடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் பிஎன்பி வங்கி இந்நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கைகளை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன் நீரவ் மோடி மனைவி அமி மோடி மீது சர்வதேச காவல் ஆணையம் ரெட் கார்னர் நோட்டீஸ்
பிறப்பித்தது.
முன்னதாக ஜுலை மாதத் தொடக்கத்தில் அமலாக்கத் துறை, ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளி சட்டம் 2018’-ன்படி நீரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.329.66 கோடி மதிப்புள்ள சொத்துகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
23 mins ago
வணிகம்
4 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago