பகுதிக் கடன் உறுதித் திட்டம்; புதிய விலக்குகளுடன் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

புதிதாக உருவாகி வரும் தேவைகளுக்கு ஏற்ப, பகுதிக் கடன் உறுதித் திட்டம் (பி சி ஜி எஸ் திட்டம் 2.0) நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கி சாரா வர்த்தக நிறுவனங்கள், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதி அமைப்புகள் ஆகியவற்றால் வெளியிடப்படும் ஏ ஏ அல்லது அதற்கு கீழான தரவரிசை கொண்ட கடன்பத்திரங்கள், வர்த்தக கடன் பத்திரங்களை, பொதுத்துறை வங்கிகள் வாங்குவதற்கு போர்ட்ஃபோலியோ உறுதி அளிப்பதற்கான, பகுதிக் கடன் உறுதித் திட்டம் பி சி ஜி எஸ் 2.0 திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சுயசார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக 20.5.2020 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

பி சி ஜி எஸ் 2.0 திட்டத்தின் கீழ் 45,000 கோடி ரூபாய்க்கான கடன் பத்திரங்கள், வர்த்தகக் கடன் பத்திரங்கள் வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது அதிகபட்சமாக ஏ ஏ மற்றும் ஏஏ- தரவரிசையிலான கடன் பத்திரங்கள், வர்த்தகக் கடன் பத்திரங்கள் ஆகியவற்றை அதிகபட்சமாக மொத்த போர்ட்ஃபோலியோவில் 25 சதவீதம் 11250 கோடி ரூபாய் அளவிற்கு வாங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இது தவிர அரசு தனியாக சிறப்புப் பணப்புழக்கத் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் வங்கி சாரா நிதிநிறுவனங்கள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் ஆகியவை வெளியிடும் மூன்று மாதங்களுக்குள் முடிவடைய கூடிய வர்த்தக கடன் பத்திரங்கள்/ மாற்ற இயலாத டிபன்சர்கள் ஆகியவற்றை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம் என்றும்,தேவைப்படும் தொகைக்கு ஏற்ப, ஆனால் ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மிகாமல் இவை நீடித்து கொள்ளப்படலாம்.

பி சி ஜி எஸ் 2.0 திட்டத்தின் கீழ் 28 நிறுவனங்கள் வெளியிட்ட ஏ ஏ/ ஏ ஏ- தரவரிசையிலான கடன் பத்திரங்கள், வர்த்தகக் கடன் பத்திரங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு, பொதுத்துறை வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதேபோல் 62 நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஏ ஏ தரவரிசையின் கீழ் மதிப்பிடப்பட்டுள்ள கடன் பத்திரங்கள், வர்த்தக் கடன் பத்திரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம்21,262 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏ ஏ/ ஏஏ-தர வரிசைப்படுத்தப்பட்டுள்ள கடன் பத்திரங்கள், வர்த்தகக் கடன் பத்திரங்களின் சராசரி டிக்கெட் அளவைவிட, ஏ ஏ- தர வரிசைக்கு கீழான தர வரிசை கொண்ட கடன் பத்திரங்கள்/ வர்த்தகக் கடன் பத்திரங்களின் சராசரி டிக்கெட் அளவு கணிசமாக குறைவாகவே உள்ளது. இதுவரை 7 464 கோடி ரூபாய் அளவிற்கான எஸ் எல் எஸ் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் ஏ ஏ/ஏ ஏ- தரவரிசையில் உள்ள கடன் பத்திரங்கள், வர்த்தகக் கடன் பத்திரங்களுக்கான வரையறுக்கப்பட்ட அளவு கிட்டத்தட்ட எட்டப்பட்டு விட்டது என்பதாலும், இந்த தர வரிசைக்கும் கீழாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ள கடன் பத்திரங்கள், வர்த்தகக் கடன் பத்திரங்கள் ஆகியவை, அவற்றின் குறைந்த அளவிலான டிக்கெட் அளவின் காரணமாக ஏறத்தாழ உச்சபட்ச நிலையை எட்டியுள்ளதாலும் பி சி ஜி எஸ் 2.0 திட்டத்தின் கீழ் கடன் பத்திரங்கள், வர்த்தகக் கடன்

பத்திரங்கள் வாங்குவதற்கான திட்டத்தை அரசு பின்வருமாறு திருத்தி அமைத்துள்ளது

i. போர்ட்போலியோவை கட்டமைத்துக் கொள்ள கூடுதலாக மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆறு மாத கால முடிவில் அதாவது 19 .11. 2020 தேதிக்குள் போர்ட்போலியோவை விநியோகிக்கப்பட்டுள்ள அசல் தொகையின் அடிப்படையில் உறுதிப்படுத்தி விடவேண்டும் அப்போதுதான் உறுதித் தொகை நடைமுறைக்கு வரும்.

ii. போர்ட்போலியோ நிலையைப் பொறுத்தவரை ஏ ஏ மற்றும் ஏ ஏ- முதலீட்டுக்கான துணை போர்ட்ஃபோலியோ இத்திட்டத்தின்கீழ் பொதுத்துறை வங்கிகள் வாங்குகின்ற கடன் பத்திரங்கள் வர்த்தகக் கடன் பத்திரங்கள் மொத்த போர்ட்ஃபோலியோவில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் ( முன்னதாக இது 25 சதவீதம் என்று வரையறுக்கப்பட்டிருந்தது)

பி சி ஜி எஸ் 2.0 திட்டத்தின் கீழ் கடன் பத்திரங்கள் மற்றும் வர்த்தகக் கடன் பத்திரங்கள் ஆகியவற்றைப் பொதுத்துறை வங்கிகள் வாங்குவதற்கு மேலும் சாதகமாக, இந்தத் திருத்தங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

மேலும்