ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கடாடா குழுமம் முடிவு செய்துள்ளது.
நிறுவன ஏலத்தில் பங்கேற்பதற்கான டெண்டர் படிவம் தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் டெண்டர் படிவத்தை டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வாய்ப்புகள் மற்றும் நிறுவனத்தை எடுத்து நடத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை அந்நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
கடும் நிதி நெருக்கடியில் உள்ள பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்குவது தொடர்பாக முதல் முறையாக டாடா குழுமம் தரப்பிலிருந்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவது குறித்து சட்ட பிரச்சினைகளை ஆராய சட்ட ஆலோசனை நிறுவனங்களை டாடா குழுமம் நியமித்துள்ளது. இந்நிறுவனத்தை வாங்கி அதை ஏர் ஏசியா நிறுவனத்துடன் இணைப்பது குறித்தும் டாடா குழுமம் பரிசீலிப்பதாக தெரிகிறது. ஏனெனில் ஏர் ஏசியா நிறுவனத்தில் டாடா குழுமத்துக்கு 51 சதவீத பங்குகள் உள்ளன.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago