பயணிகள் கப்பல்களுக்கான துறைமுகக் கட்டணத்தை 60% முதல் 70% வரை குறைத்து கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவிட்-19 நோய் பாதிப்பு சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பது என்ற அரசின் கொள்கைக்கு ஏற்ப, இந்தியாவில் பயணிகள் கப்பல் போக்குவரத்துத் துறைக்கு பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கப்பல்களுக்கான கட்டணங்களை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது. இதன் மூலம் துறைமுகக் கட்டணத்தில் 60% முதல் 70% வரை உடனடியாகக் குறைக்கப் படுகிறது.
பயணிகள் கப்பல்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகிதங்கள்:
i. பயணிகள் கப்பலுக்கு ஒரு ஜி.ஆர்.டி. (பதிவு செய்யப்பட்ட எடையில்) அளவுக்கு முதல் 12 மணி நேரம் தங்குவதற்கு (`நிரந்தரக் கட்டணம்') $0.085 என்ற அளவில் கட்டணம் விதிக்கப்படும். இது இப்போது $0.35 ஆக உள்ளது. இத்துடன் ஒரு நபருக்கு $5 என்ற கட்டணமும் வசூலிக்கப்படும். கப்பல் தளத்துக்கான வாடகை, துறைமுக நிலுவைகள், வழிகாட்டுதல் கட்டணம், பயணி கட்டணம் போன்ற வேறு எந்தக் கட்டணத்தையும் துறைமுகங்கள் வசூலிக்காது.
ii. 12 மணி நேரத்துக்கும் மேற்பட்ட நேரம் தங்குவதாக இருந்தால், எஸ்.ஓ.ஆர். கட்டணங்களின்படி கப்பல் தள கட்டணங்கள் வசூலிக்கப்படும். (பயணிகள் கப்பலுக்கான கட்டணத்தில் 40 சதவீத சலுகை உண்டு).
iii. மேலும், பின்வரும் சலுகைகளும் இருக்கும்.
A. ஆண்டுக்கு 1-50 முறைகள் வந்து செல்லும் கப்பல்களுக்கு 10 சதவீத சலுகை
B. ஆண்டுக்கு 51-100 முறைகள் வந்து செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீத சலுகை
C. ஆண்டுக்கு 100 முறைகளுக்கு மேல் வந்து செல்லும் கப்பல்களுக்கு 30 சதவீத சலுகை
மேலே குறிப்பிட்டுள்ள திருத்தப்பட்ட கட்டணங்கள் உடனடியாக அமல் செய்யப்பட்டு ஓராண்டு காலத்துக்கு அமலில் இருக்கும்.
கோவிட்-19 நோய்த் தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள, பயணிகள் கப்பல் தொழில் துறைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பயணிகள் கப்பல் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவின் வளர்ச்சிக்குத் தேவையான சரியான கொள்கை சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
உலக அளவில் பயணிகள் கப்பல் போக்குவரத்துத் துறையில் இந்தியாவை முதன்மைபடுத்தி, பெருங்கடல், ஆற்றுவழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப் பட்டிருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago