உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் என பிரதமர் மோடி பேசினார்.
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு - நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஆன்லைன் மூலமாகவே அனைத்து கணக்குகளையும் செலுத்தி, வரி செலுத்துவோருக்கு அதிகாரமளிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வர்த்தக சபைகள், வர்த்தகக் கழகங்கள், சார்ட்டர்டு அக்கவுண்ட்டுகளின் சங்கங்கள் மற்றும் முக்கியமான வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டில் நலத்திட்டங்களை நிறைவேற்ற வரி வசூல் மிக முக்கியம். வரி விதிப்பில் செய்யப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வரி செலுத்துவோர் அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும். மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீட்டை குறைக்கும் பெரும் முயற்சி
மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்று சேருகின்றன. வரி விதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள். இத்திட்டம் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும்.
கடமையை மிக முக்கியமாக வைத்து அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம். சீர்திருத்தங்களுக்கான சிந்தனை மற்றும் அணுகுமுறை மாறியுள்ளன.
நேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிப்பது நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். வரி முறையை எளிமைபடுத்துவதன் மூலம் புதிதாக வரி செலுத்துபவர்களை அதிகரிக்க முடியும்.
வரி செலுத்தும் முறை மக்களுக்கு மிக எளிமையானதாக இருக்க வேண்டும். வரி சலுகைக்கு குறுக்கு வழியை பின்பற்றுபவர்கள் முன்னேற்றம் காண முடியாது. நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மத்திய அரசின் வரி முறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இது இந்தியாவின் புதிய நிர்வாக மாதிரியாகும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
12 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago