குறையும் பெட்ரோல், டீசல் தேவை: நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலை காரணமா?

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு மற்றும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுவதை அடுத்து கடந்த ஜூலை மாதத்தில் எரிபொருள் தேவை 11.7% சரிந்தது.

கடந்த ஏப்ரலில் ஊரடங்கு அமலில் இருந்ததால் எரிபொருள் தேவை 45%-க்கும் அதிகமாகக் குறைந்தது. ஆனால் அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் எரிபொருள் தேவை படிப்படியாக அதிகரித்தது.

ஆனால் கரோனா மீண்டும் தன் வேலையைக் காட்ட, பரவல் அதிகமாக மாநிலங்கள் சில ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் மீண்டும் தேவை குறைந்தது.

கடந்த ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் ஜூலையில் பெட்ரோல், டீசல் தேவை 3.5% குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் எரிபொருள் தேவை 1.57 கோடி டன்களாக குறைந்தது. கடந்த ஆண்டு ஜூலையில் இது 1.78 கோடி டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் எரிபொருள் தேவையில் பெரிய இடம் வகிக்கும் டீசல் தேவை ஜூலையில் 19.25 % சரிவு கண்டது. 55.2 லட்சம் டன்களாகக் குறைந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 10.3% குறைவாகும்.

கடந்த மார்ச்சில் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.87 ஆகவும் டீசல் விலை ரூ.62.58 ஆகவும் இருந்தது, இன்றைய தேதியில் டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.80.43 ஆகவும் டீசல் விலை ரூ.73.56 ஆகவும் அதிகரித்துள்ளது. சிறுகச் சிறுக அதிகரிக்கப்பட்டு 10 ரூபாய்களுக்கு மேல் அதிக்ரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63. டீசல் விலை ரூ.78.86. ஆக உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் தேவை குறைந்திருக்கலாம் என்று இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர், ஆனால் தளர்வுகள் இன்னும் பரவலாக பரவலாக நிச்சயம் மீண்டும் தேவை அதிகரிக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்