விவசாயத் தொழில் முனைவோர் திட்டம்; ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி

By செய்திப்பிரிவு

ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனாவின் புதுமை மற்றும் விவசாயத் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஸ்டார்ட் அப் -களுக்கு மத்திய விவசாய அமைச்சகம் நிதியுதவி அளிக்கிறது.

விவசாயத் துறைக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. விவசாயிகளின் வருவாயை உயர்த்த நேரடியாகவும், மறைமுகமாகவும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், ஸ்டார்ட் அப் –கள் ஊக்குவிக்கப்படுகின்றன. ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனாவின் கீழ், ஒரு அம்சமாக, புதுமை மற்றும் விவசாயத் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களைத் தொடங்கவும், அதில் புதுமையைப் புகுத்தவும், நிதியுதவி வழங்குவதுடன், சுற்றுச்சூழலைப் பாதுக்காக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். விவசாய–நடைமுறைப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் விவசாயம், பண்ணை எந்திரமாக்கல், கழிவிலிருந்து செல்வம், பால் தொழில், மீன் வளம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த ஸ்டார்ட் அப் முயற்சிகள் இருக்கும்.

விவசாயக் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பான மையங்களாக 5 அறிவுசார் பங்குதாரர்களைத் தேர்வு செய்துள்ளது. அவை வருமாறு;

1. தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை நிறுவனம் (MANAGE), ஐதராபாத்,

2. தேசிய விவசாய சந்தைப்படுத்துதல் நிறுவனம் (NIAM), ஜெய்ப்பூர்,

3. இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் (IARI), புசா,,புதுதில்லி,

4. விவசாய அறிவியல் பல்கலைக்கழகம், தார்வாட், கர்நாடகா

5. அசாம் விவசாயப் பல்கலைக்கழகம், ஜோர்காட், அசாம்

நாடு முழுவதிலும் இருந்து 24 RKVY-RAFTAAR என்னும் விவசாயத்தொழில் நிறுவனங்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தத்திட்டத்தின் அம்சங்கள் வருமாறு;

• விவசாயத்தொழில் நோக்குநிலை- 2 மாத காலம், மாதாந்திர உதவித்தொகை ரூ.10,000. நிதி, தொழில்நுட்பம், ஐபி பிரச்சினைகளில் வழிகாட்டல் வசதி.

• R-ABI Incubatees -இன் விதைப்பு அளவிலான நிதியுதவி- ரூ.25 லட்சம் வரை நிதி (85% மானியம், நிறுவனத்திடம் இருந்து பங்களிப்பு 10%)

• ஐடியா/விதைப்புக்கு முந்தைய கால வேளாண் முனைவோர் நிதி - ரூ.5 லட்சம் வரை நிதி (90% மானியம், நிறுவனத்திடம் இருந்து 10% பங்களிப்பு)

நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளன. கடுமையான தேர்வு நடைமுறைகளின் மூலம், 2 மாதப் பயிற்சிக்கான தேர்வு செய்வது பல்வேறு மட்டங்களில் நடைபெறும். மானிய உதவியுடன் நிதி உதவி பெறப்போகும் ஸ்டார்ட் அப்–கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். தொழில்நுட்பம், நிதி, அறிவுசார் சொத்துரிமை, சட்டபூர்வமான விஷயங்கள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. ஸ்டார்ட் அப் –களுக்கான வழிகாட்டல், அவர்களது சாதனைகள், மூலம் அளிக்கப்படும். கால வரம்பு இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்