பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பெட்ரோல் மற்றும் டீசல் மொத்த, சில்லறை விற்பனைக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை எளிதாக்கி உள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாய்வு அமைச்சகம் 08.11.2019 தேதியிட்ட அறிவிப்பின் படி பெட்ரோல் மற்றும் டீசல் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை எளிதாக்கி உள்ளது.
எளிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் சந்தைப்படுத்துதலில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சில்லறை அல்லது மொத்த விற்பனைக்கு அங்கிகாரம் பெற விரும்பும் ஒரு நிறுவனம், விண்ணப்பிக்கும் போது குறைந்தபட்ச நிகர மதிப்புத் தொகையாக ரூ.250 கோடி வைத்திருக்க வேண்டும் (சில்லறை மற்றும் மொத்த விற்பனை இரண்டுக்குமான அங்கீகாரத்திற்கு ரூ.500 கோடி).
விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தில் நேரடியாக அமைச்சகத்திடம் சமர்பிக்கலாம் சில்லறை அங்கீகாரத்திற்கு குறிப்பிட்ட நிறுவனம் குறைந்தபட்சம் 100 சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும். இந்தக் கொள்கை, முன்னதாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை நீக்கி, பெட்ரோலியப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் துறையைத் திறந்துள்ளது. இந்தக் கொள்கை நாட்டில் போக்குவரத்து எரி பொருள்களின் சந்தைபடுத்துதலில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதை சாத்தியமாகக் கொண்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கு அங்கிகாரம் வழங்குவதற்கான தீர்மானத்தை வெளியிடுவது, பெட்ரோல் மற்றும் டீசல் சந்தைப்படுத்துதலில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார்துறைப் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைத் தாரளமயமாக்கும். இது மாற்று எரிபொருள்களைப் பகிர்ந்தளிப்பதை ஊக்குவிப்பதுடன், தொலைதூரப் பகுதிகளில் சில்லறை விற்பனைக் கட்டமைப்பை மேம்படுத்தி, உயர் அளவிலான வாடிக்கையாளர் சேவையையும் உறுதி செய்யும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
7 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago