நிலக்கரி சுரங்கத் துறையில் நேரடி அந்நிய முதலீடு தொடக்கம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் வர்த்தக ரீதியான நிலக்கரி சுரங்கத் துறையில் நேரடி அந்நிய முதலீடு தொடங்கியது.

மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட அமைப்பால் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்தியாவில் வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்கம் தொடர்பான ஏல வழிமுறைகள் பற்றியதாகும் இது.

மத்திய அரசால் வெளியிடப்பட்ட 2019 பத்திரிகை குறிப்பு 4-ன் படி நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கை 2017-ல் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன்படி, நிலக்கரி சுரங்கப்பணிகளில் 100 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு செய்யப்படலாம் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டது நிலக்கரி சார்ந்த பதப்படுத்தும் கட்டமைப்பு, நிலக்கரி விற்பனை ஆகியவை உட்பட நிலக்கரி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு வகை செய்யப்பட்டது.

இவை அனைத்தும் நிலக்கரிச் சுரங்கங்கள் (சிறப்பு அம்சங்கள் ப்ரொவிசன்கள்) சட்டம் 2015, சுரங்கம், கனிமப் பொருள்கள் (வளர்ச்சி கட்டுப்பாடு) சட்டம் 1957 ஆகியவற்றுக்கும், இவை தொடர்பான காலத்துக்கு காலம் அறிவிக்கப்படும் திருத்தங்களுக்கும், இதுதொடர்பான இதர சட்டங்களுக்கும் கட்டுப்பட்டவையாக இவை இருக்கும்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசால் வெளியிடப்பட்ட 2019ஆம் ஆண்டு பத்திரிகைக் குறிப்பு 4இன் படி, நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கை 2017, நிலக்கரிச் சுரங்கச் செயல்பாடுகளில் ஆட்டோமேட்டிக் வழியில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கிறது.

‘‘நிலக்கரி சார்ந்த மற்ற பதப்படுத்தும் கட்டமைப்பு முறைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த அனுமதி, சட்டத்திற்கும், நிலக்கரி விற்பனை தொடர்பான மற்ற அனைத்து சட்டங்களுக்கும் கட்டுப்பட்டது. வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கப்பணிகள் தொடர்பான செயல்பாடுகளில், நேரடி அந்நிய முதலீடு செய்வது என்பது, அது தொடர்பான அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டது” என்று மேலும் தெளிவுபடுத்தப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் மத்திய அரசால் வெளியிடப்பட்ட பத்திரிகைக் குறிப்பு 3, 2020-ன் படி, இந்தியாவின் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாட்டின் நிறுவனம் அல்லது இந்தியாவில் முதலீடு செய்வதால் லாபம் அடையக் கூடிய, முதலீட்டுக்கான உரிமையாளர் இதுபோன்ற நாட்டின் குடிமகனாக இருந்தால், அவர் அரசாங்க வழியில் தான் முதலீடு செய்ய முடியும்.

பாகிஸ்தான் குடிமகன் அல்லது பாகிஸ்தானில் நிறுவப்பட்ட நிறுவனம், பாதுகாப்பு, விண்வெளி, அணுமின்சக்தி ஆகியவை அல்லாத பிரிவுகள், செயல்பாடுகளிலும், அந்நிய முதலீடு தடைசெய்யப்பட்ட பிரிவுகள் செயல்பாடுகளிலும், அரசு வழியில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இதுதொடர்பாக ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தின் பிழைத்திருத்தம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்