கொல்கத்தாவில் இருந்து வங்கதேசம் வழியாக கப்பலில் வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்கு போக்குவரத்து தொடக்கம்: பெரும் பொருட்செலவு மிச்சம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா துறைமுகத்திலிருந்து அகர்தலாவுக்கு வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகம் வழியாக சரக்குகளை ஏற்றிக் கொண்டு முதல் சரக்குக் கப்பல் பயணத்தை தொடங்கியது.

கொல்கத்தாவில் இருந்து சாலை மார்க்கமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல பல நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் சரக்குகளை கொண்டு செல்ல பெரும் பொருட் செலவு ஏற்படுகிறது.

கொல்கத்தா துறைமுகத்திலிருந்து அகர்தலாவுக்கு வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகம் வழியாக சரக்குகளை ஏற்றிக் கொண்டு முதல் சரக்குக் கப்பல் பயணத்தை தொடங்கியது.

இதனால் கொல்கத்தாவில் இருந்து இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துகளை நகர்த்துவதற்காக வங்கதேசத்தின் சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா காணொலிக் காட்சி வாயிலாக இன்று கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்கு முதல் சோதனை சரக்குக் கப்பலை வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகம் வழியாக கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மன்சுக் மண்டவியா, இந்தப் பாதை இரு நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்று கூறினார். இது வடகிழக்குப் பிராந்தியத்தை வங்கதேசம் வழியாக இணைக்க தூரம் குறைவாக உள்ள மாற்றுப் பாதையாகும். இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து இயக்கத்திற்கு சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான வரலாற்று நடவடிக்கை இது என்று மாண்டவியா கூறினார். மேலும், இது இந்தியா-பங்களாதேஷ் இடையே கடல் உறவில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சோதனை இயக்கத்தின் சரக்குகளில் மேற்கு திரிபுரா மாவட்டத்திற்கு விதிக்கப்பட்ட டிஎம்டி எஃகு கம்பிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு (TEU - twenty-foot equivalent units) களும், அசாமின் கரிம்கஞ்சிற்கு விதிக்கப்பட்ட பருப்பு வகைகளை சுமக்கும் இரண்டு TEU களும் அடங்கும். சட்டோகிராமை அடைந்த பிறகு, சரக்கு வங்கதேசத்தில் லாரிகளில் அகர்தலாவுக்குக் கொண்டு செல்லப்படும்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வின் படி, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கிடையேயான இணைப்பை வலுப்படுத்த இரு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை இந்த சோதனை ஓட்டம் எடுத்து காட்டுகிறது. மேலும், அக்டோபர் 2019, இந்தியாவிலிருந்து பொருள்களைக் கொண்டு செல்லவும், அங்கிருந்து எடுத்து வரவும் சாட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கான நிலையான இயக்க நடைமுறைகளும் முடிவு செய்யப்பட்டன. இந்தக் கப்பல் போக்குவரத்து இந்தியாவிற்கும், வங்கதேசத்துக்கும் இடையிலான நீண்டகாலக் கூட்டணியை மேலும் பலப்படுத்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்