பொறியியலுக்கு அப்பால்...

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

பிளஸ் டூ முடிவுகள் வந்துவிட்டன. எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.

கொங்கு மண்டலப் பள்ளிகள் ரேங்குகளை அள்ளுவது, மாண விகள் மாணவர்களை முந்துவது, ஊடகங்கள் இந்த முதல்விகளை கொஞ்ச நாட்கள் நட்சத்திரங்கள் ஆக்குவது, பொறியியல் கல் லூரிகள் ஸ்பான்ஸர் நிகழ்ச்சிகள் வழங்குவது, பொறியியல் படித் தால் வேலை கிடைக்குமா என்று கேள்வி கேட்டு கட்டுரைகள் வருவது, பெற்றோர்கள் எல்லாம் படித்து விட்டு பணம் கொடுத்து இன்ஜினியரிங் சீட் வாங்குவது என எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.

தமிழ் நாட்டின் default degree பொறியியல் படிப்பு என்றாகி விட்டது. அங்கு போய் வரிசையில் நிற்காதீர்கள் என்று அறைகூவல் விடுப்பது பலனளிக்காது. அதற்கு பதில் சில உபயோகமான தகவல்களை (survival tips) சொல்லித் தருதல் நல்லது எனப்படுகிறது. மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கல்லூரிகளுக்கும் கூட இவை தேவை என்று நம்புகிறேன்.

முதலில் மாணவர்களுக்கு ...

“ட்ரிபிள் ஈ தான் பெஸ்ட், சிவில் சுமார்தான், பயோ டெக்னாலஜி கெத்து” என்று நண்பர்கள் பேச் சைக் கேட்காமல் எது உங்க ளுக்கு பிடிக்கிறதோ, எது உங்க ளால் நிச்சயம் அதிக சிரமம் இல்லாமல் படிக்க முடியுமோ அதைத் தேர்ந்தெடுங்கள். பிரிவு கள் பற்றிய சந்தேகங்களை பொறி யியல் ஆசிரியர்களிடம் அல்லது ஆலோசகர்களிடம் கேட்பது நல்லது.

பொறியியல் நிச்சயம் கடின உழைப்பைக் கேட்கும் படிப்பு. எல்லா பேப்பர்களையும் முதல் முயற்சியில் பாஸ் செய்வது மட்டுமல்ல, எல்லா பாடங்களின் சாரத்தையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். இரண்டு வருடங்கள் எக்கச்சக்க டெஸ்டுகள் வைத்து பயிற்சித்த பிளஸ் டூ தேர்வு போல அல்ல இது. புரியாமல் படிக்கும் படிப்பு வேலைக்கான நேர்காணலில் கை கொடுக்காது.

கண்டிப்பாக உங்கள் சீனியர் களில் பலர் புரிந்து படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள். அவர்களை சினேகம் பிடித்துக் கொண்டு அவர்கள் உதவி பெறுதல் நலம்.

பி.இ முடித்து விட்டு என் னென்ன செய்ய முடியும் என்பதை முதலிலிருந்தே அறிந்து கொள் ளுங்கள். கேம்பஸில் வேலை கிடைக்கும் என்ற ஒற்றை கிளிப் பேச்சு மந்திரத்தை மறத்தல் நல்லது. கேம்பஸ் பல வாய்ப்பு களில் ஒன்று என்று புரிந்து கொள்ளுங்கள்.

எவ்வளவு பிராக்டிகல் அனு பவம் கிடைக்குமோ அவ்வளவை யும் பெறுங்கள். இதற்காக நீங்கள் கொள்ளும் வலிகளும் செய்யும் தியாகங்களும் வீண் போகாது.

நிறைய மனிதர்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களில் சிலர் உங்களுக்கு வருங்காலத்தில் நிச்சயம் உதவக்கூடும்.

அடுத்து பெற்றோர்களுக்கு...

பொறியியல் படிப்பில் பிள்ளையைச் சேர்த்தது உங்கள் மதிப்பை உங்கள் உறவு மற்றும் நட்பு வட்டத்தில் கூட்டும். “பிளஸ் டூ விற்கு எப்படி படுத்தினான். ஹப்பா..இனி ஃப்ரீ!” என்று இருக்காதீர்கள்.

நல்ல மார்க் வாங்கிய பலர் முதல் செமஸ்டரில் அரியர்ஸ் வைப்பார்கள். அதனால் தள்ளி இருந்து அவர்களைக் கவனிப்பது நல்லது. முக்கியமாக கிளாசுக்கு போகவில்லை, பரிட்சை எழுதவில்லை என்றால் தயக்கமில்லாமல் உங்களிடம் சொல்லும் அளவுக்கு உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த கோர்ஸ் வாங்கிக் கொடுத்தது போல எப்படியாவது யாரையாவது பிடித்து நாளை வேலை வாங்கலாம் என்ற எண் ணத்தை உங்கள் பிள்ளைக்கு கொடுக்காதீர்கள். பாஸ் செய்வது முதல் வேலை வாங்குவது வரை எல்லாம் அவர்கள் முயற்சி சார்ந்தது என்று புரிய வையுங்கள்.

உங்கள் பிள்ளையின் நிஜ மான பலங்கள் என்ன என்று அறிந்து அதற்கேற்ப ஊக்குவியுங்கள். இந்த படிப்பிற்கு பின் சேர பொறியியல் சாராத பல படிப்பு களும் வேலைகளும் உள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது வருங்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளை தெளிவு படுத்தும்.

கல்லூரியுடன் நல்ல உறவு முக்கியம். தள்ளி இருந்து பேணக் கற்றுக்கொள்ளுங்கள்.

கல்லூரிகளுக்கு...

கல்லூரி முதலாளிகள் மூலதனம் என்பது அறிவு சார்ந்தும் நடக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கட்டிடங்களையும் வாகனங்களையும் மாணவர்கள் படிப்பு முடிந்து கொண்டு செல்ல முடியாது. ஆனால் இங்கு கற்ற கல்வியும் அனுபவமும்தான் அவர்கள் கொண்டு செல்பவை. அதனால் கட்டுமான முதலீடுகள் செய்வதுடன் அறிவு சார்ந்த முதலீகள் மிக மிக அவசியம். குறிப்பாக தகுதியான ஆசிரியர் களை நல்ல சம்பளம், சுதந்திரம், சிறப்பு பயிற்சி, மேல் படிப்பு, நிறுவனப் பயிற்சி அளித்தல் அனைத்தும் மிக மிக அவசியம்.

நல்ல பணிச்சூழலை ஆசிரியர் களுக்கு அளித்து, அவர்களை பயம் இல்லாமல் வேலை செய்ய விட்டாலே அவர்களால் தங்களின் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும்.

எப்படியாவது கேம்பஸுக்கு ஹெச்.ஆரை கொண்டு வரணும் என்பதை முதல்வர்கள் கை விட்டு விட்டு, நம் வளாகத்தை நிறுவனங் கள் தேடி வரும் வண்ணம் மாணவர் களைத் தயார் செய்ய வேண்டும் என்று வைராக்கியம் எடுக்க வேண்டும்.

குறைந்த செலவில், குறுகிய காலத்தில், கடைசி ஆண்டில், வேலைத்திறன் பயிற்சிகள் அளிக்காமல், முதல் வருடம் தொடங்கி இறுதி ஆண்டு வரை தகுதியான வல்லுநர்கள் கொண்டு நடத்துதல் அவசியம்.

குறைந்தது 5 நிறுவனங் களுடனாவது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு அவர்களை உங்கள் பாடத்திட்டத்தில், பயிற்சியில் கை வைக்க இடம் கொடுங்கள்.

மாணவர்களையும் மாணவி களையும் பிரித்து பாதுகாப்பது தான் கட்டுப்பாடு என்ற கோட் பாட்டைத் தளர்த்தி, ஆரோக்கிய மான சூழல் உருவாக்கி அவர் களை நவீன பணியிடங்களுக்கு தயார்படுத்துங்கள். ஆசிரியர்கள் முதல் ஆயாக்கள் வரை உளவாளிகள் நியமித்து மோப்பம் பிடிக்காமல், மாணவர்களை மதிப்பாக நடத்துங்கள். அவர்கள் உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவார்கள்.

ஒரு சிறந்த வளாக வாழ்க் கையை அவர்களுக்கு அளியுங் கள். வெளியேறிய பிறகும் உங் களுடன் தொடர்பு கொள்ளத் துடிக்கும் ஆவலை ஏற்படுத்துங் கள். முன்னாள் மாணவர்கள் ,அவர்கள் படித்த கல்லூரிகளுக்கு நிறைய செய்யலாம்.

பொறியியல் கல்லூரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போல விஷன், மிஷன் தெரிந்து, தெளிந்து, பிரத்யேக ஹெச்.ஆர் நியமித்து, வியாபார வியூகம் அமைத்து, தங்கள் கல்லூரியின் போட்டியிடும் தன்மையை (Competitiveness) உணர்ந்து காலாண்டு திட்டங்கள் செயல்படுத்தி, நிர்வாகம்-ஆசிரியர்கள்- மாணவர்கள் ஒன்றி ணைந்து குழுவாக செயல்பட்டால் வெற்றி கொள்ளலாம். கல்வியும் தப்பிக்கும்.

பி.இ.க்கு பின் கார்ப்பரேட், வங்கி, ஐ.ஏ.எஸ், சொந்த தொழில், ஆசிரியர் பணி, ஆராய்ச்சி என எது வேண்டுமானாலும் செய்யலாம்.

பொதுவாக, பிளஸ் டூவிற்கு பிறகு எதை தேர்ந்தெடுக்கலாம் என என்னிடம் சைக்கோமெட்ரிக் ஆய்விற்கும் ஆலோசனைக்கும் வருவார்கள். இனி, பொறியியல் படித்து விட்டு அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்டு வருவார்கள் என்று தோன்றுகிறது!

டாக்டர். ஆர். கார்த்திகேயன்- gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்