ஏழைகள் நல திட்டம்; வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு: மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பிரதம மந்திரியின் ஏழைகள் நல திட்டம் மற்றும் சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பான 24 சதவீதத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு அளித்து வந்த 12 சதவீத ஊழியர்களின் பங்கு மற்றும் 12 சதவீத முதலாளிகளின் பங்கு இரண்டும் சேர்த்து ஆக மொத்தம் 24 சதவீதத்தை, கோவிட் தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பிரதம மந்திரியின் ஏழைகள் நலத்திட்டம் (PMGKY/ Aatmanirbar bharath) திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜூன் முதல் ஆகஸ்ட் 2020 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க, ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் 15.04.2020 அன்று மார்ச் முதல் மே 2020 வரையிலான ஊதிய மாதங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தை கூடுதலாக நீட்டித்துள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு .4,860 கோடி.ரூபாயாகும்.. இதனால் 3.67 லட்சம் நிறுவனங்களில், 72 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள்.

முக்கிய அம்சங்கள்:

I. வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான இத்திட்டம் 100 ஊழியர்கள் வரை பணிபுரியும் அனைத்து நிறுவனங்களுக்குமானது. மேலும் இத்திட்டத்தின் பலனைப் பெறுபவர்களில் 90 சதவீத ஊழியர்கள் 15,000 ரூபாய்க்கு குறைவாக மாத ஊதியம் பெறுபவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

II. 3.67 லட்சம் நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 72.22 லட்சம் தொழிலாளர்கள் இதனால் பயனடைவார்கள், சிறு சிறு இடையூறுகள் இருந்தபோதிலும் அவர்களின் ஊதியம் தொடர வாய்ப்புள்ளது.

III. இதற்காக 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் .4800 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

IV. பிரதம மந்திரி ரோஜ்கர் யோஜனா தொழிற் கடன் திட்டத்தின் (Pradhan Mantri Garib Kalyan Yojana - PMGKY) கீழ் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் 12 சதவீத முதலாளிகளின் பங்களிப்பிலிருந்து பயனாளிகள் விலக்கப்படுவார்கள்.

V. நீண்டகால தேசிய முடக்கம் காரணமாக, வணிகங்கள் மீண்டும் வேலைக்கு வரும்போது நிதிநெருக்கடியைச் சந்திப்பது கவனத்திற்கு வந்தது. எனவே, சுயசார்பு – இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர், 13.5.2020 அன்று வணிக மற்றும் தொழிலாளர்களுக்காக அளித்து வந்த EPF ஆதரவு, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2020 மாத ஊதிய மாதங்களுக்கும் நீட்டித்து அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

52 mins ago

வணிகம்

15 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்