நேரடி மற்றும் மறைமுக வரி வாரியம் இணைப்பு இல்லை: நிதியமைச்சகம் விளக்கம்

By செய்திப்பிரிவு

மத்திய நேரடி வரிகள் வாரியத்தையும், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தையும் இணைக்கும் திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:
மத்திய வருவாய் வாரியங்கள் சட்டம், 1963-இன் கீழ் உருவாக்கப்பட்ட இந்த இரு வாரியங்களை இணைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்பதால் இதுதொடர்பானக வெளியான தகவல் உண்மைக்கு மாறானதாகும்.

பகுதிவாரியான அதிகார வரம்பில் கைப்பட செய்யப்பட்ட மதிப்பீட்டில் இருந்து முழுக்க மின்னணு சார்ந்த முகம் தேவைப்படாத மதிப்பீட்டுக்கு மாறுதல், மின்னணு சரிபார்த்தல் அல்லது பரிவர்த்தனைகள் மற்றும் முகம் தேவைப்படாத மேல் முறையீடுகள் என பெரிய அளவில் வரிசெலுத்துவோருக்குத் தோழமையான சீர்த்திருத்தங்களை நிதி அமைச்சகம் செய்து வரும் வேளையில், அமைச்சகத்தின் உரிய அதிகாரிகளிடம் உண்மைகளை சரிபார்த்துக் கொள்ளாமல் வெளியிடப்பட்டுள்ளது.

இணைப்புப் என்பது வரி நிர்வாக சீர்த்திருத்தங்கள் ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்றாகும். ஆணையத்தின் அறிக்கையை விரிவாகப் பரிசீலனை செய்த அரசு, இந்தப் பரிந்துரையை ஏற்கவில்லை.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அரசு கொடுத்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக, அரசு வாக்குறுதிகள் குழுவின் முன்னும் 2018-இல் இந்த உண்மையை அரசு சமர்ப்பித்தது.

வருவாய்த் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வரி நிர்வாகச் சீர்த்திருத்தங்கள் ஆணையத்தின் பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீதான அறிக்கையும் இந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை எனத் தெளிவாகக் காட்டுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்