சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாக் மாவை முந்தினார் டென்சென்ட் சிஇஓ போனி மா

By செய்திப்பிரிவு

சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை அலிபாபாவின் ஜாக் மாவிடம் இருந்து டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி போனி மா தட்டிச் சென்றார்.

சீனாவின் முன்னணி கேம் டெவலப்பிங் நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்கு புதன்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் முதல் முறையாக 500 ஹாங்காங் டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது. இதன்மூலம் டென்சென்ட் ஜாக் மா, அலிபாபா நிறுவனத்தை முந்தி அதிக மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.

டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட்டின் மதிப்பு இந்த வாரத்தில் மட்டும் 40 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. பிண்டோடோ என்ற ஷாப்பிங் ஆப் நிறுவனமும் இந்த ஆண்டில் 2 மடங்கு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதனால் சீனாவின் பணக்காரர்கள் பட்டியலிலும் மாற்றங்கள் கண்டிருக்கின்றன.

புளூம்பர்க் பில்லியனர் இண்டெக்ஸ் அறிக்கையின்படி டென்சென்ட்டின் போனி மா, 50 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஏற்கெனவே முதலிடத்தில் இருந்த ஜாக் மா, 48 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2-ம் இடத்தில் உள்ளார். பிண்டோடோ நிறுவனத்தின் கோலின் ஹாங் 43 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தில் உள்ளார். ஏற்கெனவே 3-ம் இடத்தில் இருந்த ரியல் எஸ்டேட் ஜாம்பவான் சீனாவின் எவர்கிராண்ட் குழுமத்தின் ஹுய் கா யன் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஊரடங்கு, வீட்டில் இருந்து வேலை, பள்ளி கல்லூரிகள் மூடல் போன்ற நடவடிக்கைகளால் இணையதளத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இணையதளம் சார்ந்த நிறுவனங்களின் பிசினஸ் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.

குறிப்பாக கேம், சமூக வலைதளங்கள், டிக்டாக் போன்ற பொழுதுபோக்கு செயலிகள் போன்றவை நன்றாக வளர்ச்சி காணத் தொடங்கி உள்ளன. 2018-ல்மோசமான நிலையில் இருந்த டென்சென்ட் நிறுவனத்தின் பிசினஸ் இன்று தலைகீழாக மாறியுள்ளது. ஊரடங்கில் கேம் விளையாடுவோரின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இதனால் கடந்த மாதம் இதன் வருவாய் 26 சதவீத வளர்ச்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் போனி மா தன் வசம் 7 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.

டென்சென்ட் நிறுவனப் பங்கு 2020-ல் இதுவரை 31 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. அலிபாபா நிறுவனப் பங்கு வெறும் 6.9 சதவீதம் மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்