கேரளத்தின் ஜவுளி துறையில் முக்கியமானவர் கல்யாண் சில்க்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ்.பட்டாபிராமன். ஈரோட்டில் கடந்த ஆண்டு 25 ஆயிரம் சதுர அடியில் கல்யாண் சில்க்ஸ் கடை ஆரம்பித்தார். அது வெற்றி வாகை சூட இப்போது சேலத்தில் 40 ஆயிரம் சதுர அடியில் கடையை ஆரம்பித்துள்ளார். எம்பிஏ படித்த தனது மகன்கள் பிரகாஷ் பட்டாபிராமன், மகேஷ் பட்டாபிராமன் ஆகியோருடன் திறப்பு விழா வேலை களில் ஈடுபட்டிருந்த அவருடன் சற்று நேரம் பேசினோம். அதிலிருந்து...
தங்கள் பூர்வீகம் குறித்து...?
எங்க பெரிய தாத்தாவுக்கு கும்ப கோணம்தான் பூர்வீகம். சுமார் 130 வருஷத்துக்கு முன்பு கேரளாவுக்கு வந்து விட்டார். அவரோட மகன்தான் எங்க தாத்தா. எஸ்.கல்யாணராமய்யர்.
தாத்தா கேரள மாநிலம் திருச்சூர்ல படித்துவிட்டு முதன்முதலாக சீதாராம் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் என்று ஒரு டெக்ஸ்டைல் மில் ஆரம்பித்தார். அந்த காலத்தில் அங்கே மொத்தமே 2 மில்தான் இருந்தது. அதுல ஒண்ணு எங்க தாத்தாவுக்கு சொந்தமானது. அந்தக் காலத்திலேயே 5 ஆயிரம், 6 ஆயிரம் பேர் அதுல வேலை செய்தார்கள்.பவர் ஜெனரேட்டர்ல உற்பத்தியாகிற மின்சாரம் மில்லுக்கு போக ஊருக்கே கரண்ட் கொடுத்தது. பின்னாளில் தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் இயக்கம்ன்னு வந்த பின்னாடி ஏகப்பட்ட பிரச்சினை. ஒரு கட்டத்துல மில்லை அரசாங்கம் எடுத்துக் கொண்டது. அதுக்கப்புறம் பொழைப் புக்கு வழிவேணுமே.
மில்லு போன பின்னாடி கல்யாண ராமய்யர் அண்ட் சன்ஸ்ன்னு ஒரு துணிக் கடையை தாத்தா ஆரம்பிச்சார். எங்க தாத்தாவுக்கு கூடப் பிறந்தவங்க 5 பேர். எல்லோருக்கும் தாத்தா சின்ன சின்னதாக துணிக்கடை வச்சுக் கொடுத்தார். அதுல என் அப்பா சீதாராமய்யருக்கும் ஒரு கடை 400 சதுர அடியில் வச்சுத் தந்தார்.
அந்தக் கடை வருமானத்தை வச்சு குடும்பத்தை நிறைவா கவனிச்சிக்கலாம். அவ்வளவுதான். என் கூடப் பிறந்தவங் களும் அஞ்சு பேர். நான் மூன்றாவது பையன். எல்லோருக்கும் கடை வச்சுத் தந்தார். நான் திருச்சூர் கேரளா வர்மா கல்லூரியில் பிகாம் முடிச்சவுடனேயே கடை நிர்வாகத்தை அப்பா கொடுத்தார். நான் கடையை நிர்வகிக்க ஆரம்பிச்சவுடனே டி.எஸ்.கல்யாணராமய்யர் அண்ட் சன்ஸ் என்றிருந்த பெயரை மாடர்னா இருக்கட்டு மேன்னு கல்யாண் ஃபேப்ரிக்ஸ்ன்னு சின்ன மாற்றம் செய்தேன். இப்படி கடை பெயரை மாத்தறதுக்கா உன்னை கொண்டு வந்தேன்? பெரியவங்க பேரை மாத்தக்கூடாதுன்னு அப்பா பேசினார். நான் தாத்தா பெயரை இங்கேயே வச்சி ருந்தா ஆச்சா? உலகம்பூராவும் பரப்ப வேண்டாமா? அதுக்கு இந்த பேர்தான் சரியா வரும்ன்னு சொன்னேன். அதுக்கு பிறகு கடை வளர ஆரம்பித்தது.
கல்யாண் சில்க்ஸ் எப்ப ஆரம்பிச்சீங்க?
1992ல் ஏப்ரல் 8-ம் தேதி. 400 சதுர அடி கடைக்கு அடுத்ததா இது 4,000 சதுர அடியில் அமைந்தது. இது டவுன் நடுவில் அமைந்ததால் நாங்க எதிர்பார்த்ததை விட 10 மடங்கு வியாபாரம் பெருகிடுச்சு. கடைக்குள்ளே இடம் கிடைக்காமல் கியூவுல நின்று ஜனங்க துணிகளை வாங்கினாங்க. எங்க ஜவுளி வியா பாரத்துக்கு குடும்ப வரலாறு இருக்கு. தவிர 15 வருஷம் சின்னக்கடையில் உட்கார்ந்து வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்கள். அவர்களை எப்படி அணுகுவது? அவர்களை திருப்தி செய்வது எப்படி? எது தரமான ஜவுளி. அதில் எது மலிவு? துணிகள் தயாரிப்பில் எந்த உத்தியை கையாளுவது? என்பதை யெல்லாம் அனுபவ நுட்பத்துடன் தெரிந்து கொண்டு, அதை இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து நானே பர்ச்சேஸ் செய்து, பெரிய கடையில் கொடுத்ததன் விளைவே இந்த வெற்றி என்பது அப்போதுதான் எனக்கு புரிய ஆரம்பித்தது.
1996-ல் மொத்த வியாபாரம் (whole sale) ஆரம்பிச்சோம். அதற்கு வரவேற்பு இருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் எங்களிடம் வந்ததால் மேலும் வியாபாரத்தை விஸ்தரிக்க வேண்டிய நிலை உருவானது.
2001-ம் ஆண்டில் 40,000 சதுர அடியில் ஒரு கடை ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் 2007ல் கொச்சியில் 1.25 லட்சம் சதுர அடியில் கல்யாண் சில்க்ஸ் உருவானது. இதை கல்யாணின் மாதிரி மெகா ஷோரூம்; இதில் இல்லாத அயிட்டங்களே இல்லை எனலாம். பிறகு பாலக்காடு, கள்ளிக்கோட்டை, கண்ணூர், கோட்டயம், திருவள்ளா, திருவனந்தபுரம், பெங்களூர் என வளர்ந்தது. துபாயில் 2 கடைகள், அபுதாபி, ஷார்ஜாவில் தலா ஒன்று என விஸ்தரித்தோம். தமிழ்நாடு நம்ம ஊர். நமது பூர்வீகம். அதனால் போன வருஷம் ஈரோட்டில் முதலில் 25 ஆயிரம் சதுரஅடியில் கடை ஆரம்பித்தோம்.
இந்த அபரிமித வளர்ச்சியை பார்த்து உங்களை நீங்களே பிரமித்துக் கொண்டதுண்டா?
இது நம்ம செஞ்சதுதானா? என்பது ஆரம்பத்தில் இருந்தது. அதை யும் தாண்டி இது ஒரு டீம் ஒர்க் என்பதில் அசைக்கமுடியாத நிறைவு இருந்தது. தொழிலாளி, தொழிலதிபர் உறவு முறையே இதன் வளர்ச்சிக்கு காரணம். எங்கள் கடைகள் மூலம் 7 ஆயிரம் பேர் நேரடியாகவும், 10 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். தமிழ்நாடு உள்பட இந்தியா முழுக்க 3,000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பயனடைகிறார்கள். முன்பெல்லாம் தறிகாரர்களுக்கு வருடம் முழுக்க வேலையும், நிறைவான கூலியும் கிடைக்காது. தவிர முன்பணம் பெற்று பல இடங்களில் கடனில் மீள முடியாது சிக்கி தவித்து வந்த நிலை இருந்தது. அதை எங்கள் கல்யாண் சிலக்ஸ் சுத்தமாக மாற்றியுள்ளது.
புதிது புதிதாய் வருகிற ஷோரூம்களுக்கு மக்கள் செல்கின்ற நிலைமையை காண்கிறோம். போட்டியை கல்யாண் எப்படி எதிர்கொள்கிறது?
எங்களது அடிப்படை மிகவும் பலமாக இருப்பதால் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. புதுசா ஒன்று வரும் போது மக்கள் ஈர்க்கப்படுவது சாதார ணமான ஒன்று. ஆனால் அந்த கடைக்கு போய்விட்டு நம்ம கல்யாண் சிலக்ஸ் போல இல்லையே என்று திரும்பி வரும் போதுதான் அதில் வெற்றி அடங்கியுள்ளது. ஒரு முறை அப்படி புதுசுக்கு போய் திரும்ப நம்ம கடைக்கே வருபவர்கள் மீண்டும் வேறு கடைக்கு செல்வதில்லை. விளம்பரம் என்பதை வெறுமனே மக்களை கவர்வதற் காக பயன்படுத்தினால் அது வீணாகிவிடும். ஒரு கடைக்குள் 100 சதவீதம் இது இருக்கு என்று விளம்பரப்படுத்தினால் 100% அந்த கடையில் இருந்தே ஆகவேண்டும். அது இல்லாமல் போனால் மக்கள் நம்ப மாட்டாங்க.
வெளிநாடுகளிலும் கடைகள் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
வாடிக்கையாளரே முக்கியமானவர். அவரே நமது சொத்து என்று காந்தியடிகள் சொன்னாரே அதுதான் இதற்கு காரணம். நாங்கள் சேர்த்து வைத்த சொத்தே வாடிக்கையாளர்கள்தான். எங்களுடைய கேரள வாடிக்கையாளர்கள் நிறையபேர் துபாய், மஸ்கட், அபுதாபி, ஷார்ஜான்னு இருக்கிறார்கள். அவர்கள் வருடத்திற்கு ஒரு முறையே கேரளத்திற்கு வருகிறார் கள். நாங்கள் இப்படி உங்கள் கடையில் வருடத்திற்கு ஒரு முறைதான் வந்து துணி எடுக்க முடிகிறது. இந்த மாதிரி சேலைகள், மெட்டீரியல்கள் எங்களுக்கு அங்கே கிடைப்பதில்லை. அங்கேயே நீங்கள் கடை திறக்கலாமே? என்று கேட்டார்கள். அதைத்தான் நாங்கள் செய்தோம். இப்படி எங்களை வளர அழைத்துச் செல்வதே வாடிக்கையாளர்கள்தான். அவர்களாலேயே வளர்கிறோம்.
velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago