கச்சா எண்ணெய் உற்பத்தியும், விலையும் சீராக இருக்க வேண்டும்: ஒபெக் அமைப்பிற்கு மத்திய அரசு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலை சீராக இருக்க வேண்டும் என உற்பத்தி நாடுகளின் அமைப்பான ஒபெக் தலைமைச் செயலாளரிடம் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் (OPEC) தலைமைச் செயலாளர் எச்.இ.டாக்டர் முகமது பர்கின்டோவுடன் காணொலி காட்சி மூலம் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார்.

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தற்போதைய நிலவரம்,கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள கூட்டம் குறித்து இந்த ஆலோசனை நடந்தது.

தர்மேந்திர பிரதான்

உலகளவிலான பொருளாதார மந்த நிலையை வரும் நாட்களில் புதுப்பிக்க, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் நுகர்வு நாடுகள் எடுக்க வேண்டிய பொறுப்பான நடவடிக்கைகளை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார். பெட்ரோலிய சந்தையை நிலைப்படுத்துவதில் ஒபெக் அமைப்பின் பங்கு பற்றி வலியுறுத்திய அவர், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்புக்காக ஒபெக் நாடுகளுடன் இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டார்.

மேலும், தற்போதைய சவாலான சூழ்நிலையில் உலக எரிசக்தி நிலைத்தன்மைக்கு இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டார். தொற்றை எதிரகொள்ள இந்தியா எடுத்த முயற்சிகள், இந்தியாவின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை பர்கின்டோ பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்