வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் சாத்தியம் இல்லை

கோடை கால ஆடைகளுக்கான சர்வதேச பின்னலாடைக் கண்காட்சியை, மத்திய ஜவுளித்துறை செயலர் ஜோரா சட்டர்ஜி திருப்பூரில் புதன்கிழமை தொடங்கி வைத்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய பின்னலாடை கண் காட்சி அமைப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆண்டு தோறும், சர்வதேச அளவிலான பின்னலாடை கண்காட்சிகளை நடத்தி வருகின்றன.

தற்போது, 38-வது முறையாக சர்வதேச அளவிலான கோடைகால பின்னலாடைக் கண் காட்சி திருப்பூர் திருமுருகன் பூண்டி யில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் மே 9 ம் தேதி வரை, தொடர்ந்து 3 நாட் கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

கண்காட்சியை தொடங்கி வைத்து மத்திய ஜவுளித்துறை செயலர் ஜோரா சட்டர்ஜி பேசிய தாவது : திருப்பூரில் ஆடை ஏற்று மதி வர்த்தகம் 18 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது. இந்த பின்னலாடைத் தொழில்நுட்ப மையம் (கே.டி.எம்) மூலம் ஏற்றுமதி வர்த்தகம் மேலும் உயரும் என நம்பிக்கை உள்ளது.

தற்போது, வர்த்தகத்தில் குறுக்கீடுகள் குறைந்துள்ளன. ஐரோப்பா நாடுகளுடன் எப்.டி.ஏ (வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம்) போட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஜவுளித்துறைக்கு மட்டும் ஒப்பந்தம் தருவது சிக்கலானது. சாத்தியமும் இல்லை. எனவே, அனைத்து வகையான தொழில்துறையினரின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஒப்பந்தம் கையெழுத் தாகிவிடும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE